‘டிராகன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு!

10 hours ago
ARTICLE AD BOX

டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது.'டிராகன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி டிராகன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஓnமை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், மிஸ்கின், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். கல்லூரி சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. அதன்படி இப்படம் வெளியான 10 நாட்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்தது 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் தற்போது வரை ரூ. 150 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. 'டிராகன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு!இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிராகன் திரைப்படம் வருகின்ற மார்ச் 21ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article