ARTICLE AD BOX
உடல் எடையை குறைப்பது மிகவும் சிரமமான காரியம். சரியான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் மட்டுமே உடல் எடையைக் குறைக்க முடியும்.
இதற்கு பிரதானமாக உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் போது தான் உடல் எடை குறையத் தொடங்கும். அதற்கு உதவி செய்யக் கூடிய இஞ்சி சாறு எப்படி தயாரிப்பது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
இஞ்சியின் தோல்கள் அனைத்தையும் நீக்கி விட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இப்போது, அரைத்து வைத்திருக்கும் இஞ்சியில் இருந்து சாறு மட்டும் 10 மில்லி லிட்டர் தனியாக எடுக்க வேண்டும்.
இந்த இஞ்சி சாறுடன் 100 மில்லி லிட்டர் சுடுதண்ணீர், சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும். இறுதியாக இத்துடன் சிறிதளவு தேன் கலந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் குடித்தால் நம் உடலில் இருக்கும் தேவையற்றை கொழுப்புகள் கரைந்து வெளியேற தொடங்கும்.
தேவையற்ற கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை இஞ்சிக்கு இருக்கிறது. இவை தவிர நடைபயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். இந்த பழக்கத்தை ஏற்படுத்துக் கொள்வதன் மூலம் நம் உடல் எடையை குறைக்க முடியும்.
நன்றி - Dr.Nithya's Varam Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.