ARTICLE AD BOX
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தில் 3 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி நேற்று வழக்கம் போல், அருகே உள்ள அங்கன்வாடிக்குச் சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீடு திரும்பும் போது, 16 வயது சிறுவன் ஒருவன், குழந்தைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளான். மேலும், சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சாக்லேட்டை பார்த்ததும் தன்னுடன் வந்த குழந்தையை, சிறுவன் அருகில் உள்ள புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் பதறிப்போன குழந்தை, கதறி துடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், குழந்தையின் தலை மற்றும் முகத்தில் கல்லால் கடுமையாக தாக்கியுள்ளான். இதில் குழந்தை படுகாயம் அடைந்துள்ளது.
குறிப்பாக, குழந்தையின் கண் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில், சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனிடையே, குழந்தையை காணவில்லை என்று பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் குழந்தையைத் தேடியுள்ளனர். அப்போது, அங்கன்வாடிக்கு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத புதர் பகுதியில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது குழந்தை, தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ந்துப் போன பெற்றோர், உடனடியாக குழந்தைக்குச் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காகப் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், இன்று சிறுவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: “அம்மா, அந்த தாத்தா என்னோட டிரெஸ்ஸை கழட்டி……” 7 வயது சிறுமிக்கு, பூசாரி செய்த காரியம்..
The post கொடூரத்தின் உச்சம்!! 3 வயது சிறுமியை கல்லால் அடித்து, பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.