ARTICLE AD BOX
திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் உள்ள அண்ணா அரங்கத்தில் திரைக்கலைஞர் நடிகர் சிவக்குமார் ‘திருக்குறளின் கதையும் உரையும்’ என்ற தலைப்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக நடிகர் சிவகுமாருக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவிகளிடம் சிறப்புரை ஆற்றிய அவர், தான் வரைந்த ஓவியங்களை திரையிட்டு அந்தந்த ஓவியங்கள் எப்பொழுது வரையப்பட்டது எவ்வளவு நேரத்தில் வரையப்பட்டது என விரிவாக எடுத்துரைத்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து, “தந்தை பெரியார் என்பவர் சாமி இல்லை என்று கூறியவர். ஒடுக்கப்பட்ட, பட்டியலின என அனைத்து சாதி மக்களும் உயர்ந்த பதவியில் இருக்க போராடிய பெருமை கொண்டவர்.
மனிதனாக பிறந்த அனைவரது வாழ்வில் ஏற்பாடும் சம்பவங்களுக்கும் ஏற்றவாரே திருக்குறளில் ஒவ்வொரு குறலும் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறளை இப்பொழுது ஏன் படிக்க வேண்டும்? திருக்குறளில் நமக்கு தேவையான அனைத்து விதமான கருத்துக்களும் உள்ளது. திருக்குறளை படிப்பது மட்டுமின்றி அதனுடைய கதைகளையும் படித்தால் மாணவர்கள் வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு செல்லலாம்” எனத் தெரிவித்தார்.