ARTICLE AD BOX
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பிரபுதேவா. விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த் என்று மாஸ் ஹீரோக்கள் சினிமாவில் அறிமுகமாகி நடித்த காலத்திலேயே பிரபுதேவாவும் நடிக்க ஆரம்பித்தார். 1994 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்து படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான பிரபுதேவா, காதலன், ராசய்யா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி, காதலா காதலா என்று ஏராளமான படங்களில் நடித்தார். கடைசியாக 2003 ஆம் ஆண்டு திரைக்கு வந்த எங்கள் அண்ணா படத்தில் நடித்த பிரபுதேவாவிற்கு அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார். இதையடுத்து 13 ஆண்டுகளுக்கு பிறகு தேவி படம் மூலமாக மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்போது தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் என்று பிரபுதேவா திகழ்கிறார்.
இந்த நிலையில் தான் முதல் முறையாக நடன நிகழ்ச்சி நடத்தியுள்ளார். சென்னையில் YMCA மைதானத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் வடிவேலு, தனுஷ், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி என்பதால் ஏராளமான நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் பிரபுதேவா தனது மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதுவும் பிரபுதேவாவின் பேட்ட ராப் பாடலுக்கு டான்ஸ் ஆடும் இளைஞனின் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவை அறிமுகம் செய்வது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவருடன் இணைந்து சாண்டி மாஸ்டர் டான்ஸ் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா நடிப்பில் கடைசியாக ஜாலியோ ஜிம்கானா படம் வெளியானது. இந்தப் படத்திற்கு பிறகு இப்போது அவரது கைவசம், Kathanar – The Wild Sorcerer, Maharagni- Queen of Queens, ஃபிளாஷ்பேக், சிங்கநல்லூர் சிக்னல், முசாசி, Wolf ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் தனது மகனையும் சினிமாவில் அறிமுகம் செய்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அருண் விஜய், விஜய் சேதுபதி, ரவி மோகன், விஜய் ஆகியோர் தங்களது மகனை சினிமாவில் அறிமுகம் செய்த நிலையில் பிரபுதேவாவும் அந்தப் பட்டியலில் இணைய உள்ளார் என கூறப்படுகிறது. ஏற்கனவே தன்னுடைய மகனுக்கு சினிமா மீது ஆசை இருப்பதாக தெரிவித்த பிரபு தேவா, இப்போது மகனின் நடன திறமையை வெளிப்படுத்தி உள்ளார். ரிஷியின் நடனம் அப்பா பிரபு தேவாவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
Proud to introduce my son Rishii Ragvendar Deva, as we share the spotlight for the first time! This is more than dance—it’s legacy, passion, and a journey that’s just getting started. 🙏❤️❤️❤️ pic.twitter.com/L00r6VN5Kc
— Prabhudheva (@PDdancing) February 25, 2025