ARTICLE AD BOX
உடல்நல சிக்கல்கள் காரணமாக சினிமா பணிகளில் இருந்து விலகியிருந்த நடிகை சமந்தா உற்சாகமாக மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்குவதாக தெரிவித்துள்ளார்.
கடைசியாக அமேசானில் வெளியான சிடாடெல் ஹன்னி பன்னி வெப் தொடரில் வருண் தவானுடன் நடித்த சமந்தா, அடுத்ததாக இந்தி திரையிலக இயக்குநர் இணை ராஜ் மற்றும் டிகே இயக்கும் வெப் தொடர் ரக்த பிரஹ்மத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் வாமிக்கா கப்பி, அலி ஃபாசில், ஆதித்யா ராய் கப்பூர் ஆகியோர் நடிக்கின்றனர்.

நியூஸ் 24 சேனலுக்கு அளித்த பேட்டியில், "நான் இப்போது ராஜ் மற்றும் டிகே-வின் ரக்த பிரஹ்மத் தொடரை முடிக்க வேண்டும். அடுத்ததொரு படம் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் தொடங்கிவிடும். அதனால் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் திரைப்பட உருவாக்கத்தில் விலகியிருப்பதெல்லம் முடிந்துவிட்டது. இதுதான் என் முதல் காதல்" எனப் பேசியுள்ளார் சமந்தா.
ஏற்கெனவே அறிவித்த பங்காரம் படத்தின் மூலம் சமந்தா தயாரிப்பாளராகவும் உருவாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Samantha: `சினிமா துறையில் சிறந்த நடிகைகள் யார்?' -ரசிகரின் கேள்விக்கு, சமந்தா சொன்ன பதில்..!