மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி

2 hours ago
ARTICLE AD BOX

பெங்களூரு,

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து குஜராத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக பெத் மூனி மற்றும் ஹார்லின் தியோல் களம் இறங்கினர்.இதில் ஹார்லீன் தியோல் 5 ரன்னிலும், பெத் மூனி 10 ரன்னிலும், அடுத்து வந்த ஆஷ்லே கார்ட்னெர் 3 ரன்னிலும், லிட்ச்பீல்ட் மற்றும் கேஷ்வீ கவுதம் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதனால் குஜராத் அணி 41 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதையடுத்து டியாண்ட்ரா டாட்டின் மற்றும் தனுஜா கன்வர் ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டாட்டின் 26 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.குஜராத் தரப்பில் அதிகபட்சமாக பாரதி புல்மாலி 40 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் ஷிகா பாண்டே, மரிசான் கேப், அன்னபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி ஆடியது .

தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது . இதனால் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் ஜெஸ் ஜோனாசென் 61 ரன்களும் , ஷபாலி வர்மா 44 ரன்களும் எடுத்தனர்.


Read Entire Article