ARTICLE AD BOX
இந்த உலகில் பிரசித்தி பெற்ற எத்தனையோ உண்டு. அதில் ஒன்று தான் சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த தொகுப்பில் அதன் பெருமை மற்றும் வரலாறை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தலத்தின் பெயர்: சமயபுரம் மாரியம்மன்.
அமைவிடம்: இது சக்தி திருத்தலம். திருச்சிக்கு வடக்கே அமைந்துள்ளது. திருச்சி – விழுப்புரம் ரயில் பாதையில் உத்தமர் கோயில் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.
இறைவி: சமயபுரத்தாள்
தலப்பெருமை:
இத்தலத்து அம்பாள் மகா வரப்பிரசாதி. இவ்வம்மைக்கு கண்ணனூர் மாரியம்மன் எனும் பெயரும் உண்டு. சமயபுரத்தாள் என்று இந்தப் பராசக்தியைப் பக்தர்கள் பரவசத்துடன் போற்றிப் பிரார்த்தித்து வழிபடுகின்றனர். இங்கு ஆடி வெள்ளி திருவிழா முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆடி கடைசி வெள்ளி திருவிழா வெகு சிறப்பாக இருக்கும்.
தல வரலாறு:
வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால் அந்த சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார் அதிகாரி. அந்த ஆணைக்கிணங்க அதை எடுத்து கொண்டு தற்போது இருக்கும் சமயபுரத்திற்கு வந்தது. அப்போது ஊழியர்கள் இளைப்பாறினார்கள். அதன் பின்னர் அந்த சிலையை அங்கிருந்து எடுக்க முடியவில்லை.
இதனால் அவர்கள் அப்படியே விட்டு சென்று விட்டனர். அதை மக்களும் அதிசயத்துடன் வழிபட்டு வந்தனர். அன்றைய விஜயநகர மன்னர் தென்னாட்டில் மீது படையெடுத்து வந்தபோது சமயபுரத்தில் இளைப்பாறினார்கள். அப்போது இந்த அன்னையை வழிபட்டு சென்று வெற்றிவாகை சூடினார்கள். ஆகையால் 1706 இல் அம்மனுக்கு தனிக் கோயில் அமைத்தார்கள். இந்த அம்மாள் கண்ணனூர் மாரியம்மன் என்று அழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.