ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!!

3 hours ago
ARTICLE AD BOX

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக 68 இடங்களிலும், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிட்டது. 

காலையில் 7 மணிக்கு விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியிருந்த நிலையில், மக்கள் வேகமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வந்தனர். இதனையடுத்து, 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. இன்னும் ஒரு சில வாக்கு சாவடிகளில் மட்டும் மக்கள் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். மேலும் டெல்லி தேர்தலை, மாலை 5 மணி நிலவரப்படி 57.78% வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகின்றனர். அதேபோல் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில்  உள்ளனர்.

5 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 64.02 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆறு மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நிறைவு பெற்றுள்ளது. 

Read more : நீண்ட நாள் விடுப்பு..!! சந்தேகத்தில் பள்ளி மாணவியின் வீட்டிற்கே போன தலைமை ஆசிரியர்..!! பெற்றோர் கூறியதை கேட்டு அதிர்ச்சி..!!

The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article