வீட்டுக் கடனை வங்கி to வங்கி மாற்ற போறீங்களா? விஷயம் இருக்கே பாஸ்!

3 hours ago
ARTICLE AD BOX

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில் கடன் வழங்குதல் மிகவும் எளிதாகி விட்டது. அதிலும் குறிப்பாக வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடனானது, பல பேருடைய சொந்த வீட்டுக் கனவை நனவாக்கி உள்ளது. இருப்பினும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அது வட்டி தான். ஒருவர் வாங்கிய வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதனை வேறொரு வங்கிக்கு மாற்ற நினைக்கலாம். சில வங்கிகள் தாமாகவே முன்வந்து இந்த வசதியை வழங்குகின்றன. அப்படி வீட்டுக் கடனை மாற்றும் போது நாம் எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

வீட்டுக் கடனை வாங்கும் போது பொதுவாக 0.5 முதல் 2% வரை செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் குறைவாக இருந்தால் அது வாடிக்கையாளர்களுக்கு பலனளிக்கும். வீட்டுக் கடனை வேறொரு வங்கிக்கு மாற்றும் போதும் செயலாக்க கட்டணம் நிரண்யிக்கப்படும். ஆனால், இந்த நேரத்தில் இந்தக் கட்டணம் குறைவாக இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களை ஈர்க்க ஒருசில வங்கிகள் இந்தக் கட்டணத்தை தள்ளுபடியும் செய்கின்றன.

அடுத்ததாக, முந்தைய வங்கியை விட கடனை மாற்றப் போகும் வங்கியில் வட்டி விகிதம் குறைவாக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். குறைவாக இருந்தால் தான் நமக்கு பலன் கிடைக்கும். வட்டி அதிகமாக இருந்தால், கடனை மாற்றுவதில் எவ்வித பலனும் இல்லை.

வீட்டுக் கடன் வாங்கும் போது எந்தெந்த ஆவணங்களை வாடிக்கையாளர் சமர்ப்பித்திருக்கிறார், அசல் கடன் தொகையின் விவரம், இதுவரை செலுத்திய கடன் தொகை எவ்வளவு மற்றும் வட்டி விகிதம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும், கடனை மாற்றப் போகும் புதிய வங்கிக்கு பழைய வங்கி அனுப்பி வைக்கும். பிறகு, ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் வாடிக்கையாளரின் மீதமுள்ள கடனை புதிய வங்கி செலுத்தியதும், வாடிக்கையாளர் சமர்ப்பித்த ஆவணங்களை பழைய வங்கி ஒப்படைத்து விடும்.

வீட்டுக் கடனை மாற்றும் போது, அதுவரையிலான காலகட்டத்தில் மாதத் தவணையை சரியாக செலுத்தி இருக்கிறாரா என்பதை இரு வங்கிகளுமே சரிபார்க்கும். ஏனெனில் மாதத் தவணையை சரியாக செலுத்தி இருந்தால் தான், புதிய வங்கி கடனை மாற்றிக் கொள்ள ஒப்புதல் அளிக்கும். வங்கிகள் தவிர்த்து நிதி நிறுவனங்களிடம் வாடிக்கையாளர் வீட்டுக் கடனைப் பெற்றிருந்தால், இந்தக் கடனை வங்கிக்கு மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ள வழிமுறைப்படி செயல்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வீட்டுக் கடனை பெண்கள் பெயரில் வாங்கினால் இத்தனை நன்மைகளா!
Home Loan Transfer

இரண்டு வங்கிகளும் விதித்துள்ள வட்டி விகிதம், இன்னும் எத்தனை ஆண்டுகள் கடனை செலுத்த வேண்டும், எந்த வங்கியில் கடனைத் தொடர்ந்தால் பலன் கிடைக்கும் என்பதை ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். இதில் நிச்சயமாக பலன் கிடைக்கும் என்று தெரிந்தால் மட்டுமே வீட்டுக் கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றிக் கொள்வது சிறப்பாக இருக்கும். இல்லையெனில் அது நமக்கு தான் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தி விடும்.

Read Entire Article