இப்போ ரூ.8000, ரூ.9000, ரூ11,000 பட்ஜெட்ல கிடைக்குது.. 4 ரெட்மி 5ஜி போன்கள் மீது டிஸ்கவுண்ட்.. மார்ச் 13 வரை!

8 hours ago
ARTICLE AD BOX

இப்போ ரூ.8000, ரூ.9000, ரூ11,000 பட்ஜெட்ல கிடைக்குது.. 4 ரெட்மி 5ஜி போன்கள் மீது டிஸ்கவுண்ட்.. மார்ச் 13 வரை!

News
oi-Muthuraj
| Published: Sunday, March 9, 2025, 21:10 [IST]

ரெட்மி (Redmi) நிறுவனமானது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக ஸ்மார்ட் சேவிங் டேஸ் (Smart Saving Days) என்கிற சிறப்பு விற்பனையை நடத்துகிறது. இது மார்ச் 13 ஆம் தேதி வரை நடக்கும். இதன்கீழ் வெவ்வேறு பட்ஜெட்களில் அறிமுகமான 4 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. என்னென்ன மாடல்கள் என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன? இதோ விவரங்கள்:

ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G): ரெட்மி ஸ்மார்ட் சேவிங் டேஸ் விற்பனையின் கீழ், ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,999 க்கு பதிலாக ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கும். இது பேங்க் டிஸ்கவுண்ட்டை உள்ளடக்கிய ஆபர் விலை ஆகும்.

4 ரெட்மி 5ஜி போன்கள் மீது டிஸ்கவுண்ட்.. மார்ச் 13 வரை!

ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): ரெட்மி ஸ்மார்ட் சேவிங் டேஸ் விற்பனையின் கீழ், ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,999 க்கு பதிலாக ரூ.8,299 க்கு வாங்க கிடைக்கும். இது பேங்க் டிஸ்கவுண்ட்டை உள்ளடக்கிய ஆபர் விலை ஆகும்.

ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G): ரெட்மி ஸ்மார்ட் சேவிங் டேஸ் விற்பனையின் கீழ், ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.21,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கும். இது பேங்க் டிஸ்கவுண்ட்டை உள்ளடக்கிய ஆபர் விலை ஆகும்.

ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G): ரெட்மி ஸ்மார்ட் சேவிங் டேஸ் விற்பனையின் கீழ், ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கும். இது பேங்க் டிஸ்கவுண்ட்டை உள்ளடக்கிய ஆபர் விலை ஆகும்.

ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டியுவி ரெயிண்லேண்ட் (TUv Rheinland) சான்றிதழ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7025 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. கூடவே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி64 ரேட்டிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5110mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்ள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உடன் வரும் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) உடன் வருகிறது. ரெட்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 வருட ஓஎஸ் அப்டேட்கள் (2 Major OS Updates) மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 720 x 1640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.88-இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை (LCD Display) கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை இது 4ஜிபி எல்பிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் (4nm Snapdragon 4s Gen 2 chipset) மூலம் இயக்கப்படுகிறது.

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உடன் வருகிறது. இதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உடன் குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமரா ஒன்றும் உள்ளது. முன்பக்க கேமராவை பொறுத்தவரை செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரியை பொறுத்தவரை இது 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் பாக்ஸில் (Smartphone Retail Box) ரூ.1,999 மதிப்புள்ள 33W சார்ஜர் முற்றிலும் இலவசமாக அனுப்பப்படும் என்று அமேசான் இந்தியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Redmi Smart Saving Days Sale in Amazon India Until March 13 Check Out Best Deals
Read Entire Article