ARTICLE AD BOX
சென்னை: சாம்பியன்ஸ் டிராபி கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5வது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கோலியின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் 14 ஆயிரம் ரன்களை விரைவாக குவித்தவர் என்ற சாதனையையும் படைத்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலிக்கு எனது வாழ்த்துகள். சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இதே உத்வேகத்தோடு செயல்படுங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post இதே உத்வேகத்தோடு செயல்படுங்கள் இந்திய அணி வெற்றிக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.