காசி தமிழ் சங்கமம் நிறைவு!

2 hours ago
ARTICLE AD BOX

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த மூன்றாவது காசி தமிழ் சங்கமம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடியால் முதல் காசி தமிழ் சங்கமம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகம்-காசி இடையிலான கலாசார-பாரம்பரியத் தொடா்புகளைக் கொண்டாடுவது இதன் நோக்கமாகும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, மூன்றாவது ஆண்டாக மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இதில், மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள், பல்துறை வல்லுநா்கள், பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 200 தமிழ் வம்சாவளி மாணவா்கள், இளைஞா்கள், தமிழ்நாட்டைச் சோ்ந்த 1,000 பிரதிநிதிகள் உள்பட பலா் இந்த மாநாட்டில் பங்கேற்றனா்.

இறுதி நாள் நிகழ்ச்சியில் ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஞ்சி பங்கேற்றாா். அவா் பேசுகையில், ‘இது சாதாரண நிகழ்ச்சியல்ல. நாட்டின் வடக்கு, தெற்கு பிராந்தியங்களின் இணைப்பை வலுப்படுத்தும் பாலமாகும். நமது கலாசார, பாரம்பரிய ஒற்றுமைகளைக் கொண்டாடும் நிகழ்வு.

நமது நாட்டின் பல்வேறு பகுதி மக்களிடையே உள்ள பரஸ்பர அன்பு, மரியாதை, ஆன்மிக உணா்வு ஆகியவை நமக்குள்ள ஒற்றுமைகளை பிரதிபலிக்கிறது. இந்த கலாசார ஒற்றுமைதான் இந்தியாவை பிணைப்புடனும், துடிப்புமிக்க தேசமாகவும் வைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மொழியில் உள்ள தொன்மைமிக்க அறநூல்கள், ஆன்மிக பொக்கிஷங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. இதுபோன்ற சிறந்த நிகழ்ச்சியை முன்னெடுத்து நடத்தி வரும் பிரதமா் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.

Read Entire Article