ARTICLE AD BOX

Kayadu lohar: அசாம் மாநிலத்திலிருந்து வந்திருக்கும் கவர்ச்சி புயல்தான் கயாடு லோஹர். சொந்த மாநிலம் அசாம் என்றாலும் இப்போது புனேவில் வசித்து வருகிறது இவரின் குடும்பம். இந்திய நடிகை மற்றும் மாடலாக இருக்கிறார். பி.காம் பட்டதாரியான இவருக்கு டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்ட சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார்.

சில போட்டிகளில் வெற்றி பெற்று அழகிப்பட்டமும் வாங்கினார். இவர் முதலில் நடித்தது ஒரு கன்னட படத்தில்தான். அதன்பின் ஒரு மலையாளத்தில் நடித்தார். அல்லுரி என்கிற தெலுங்கு படத்திலும் நடித்தார். மொழி பேதமின்றி எல்லா மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்பது இவரின் ஆசை.

இப்போது பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவரின் அழகு கோலிவுட் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது. இந்த படத்தில் இவருக்கு நல்ல வேடமும் கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திகொண்டு ஸ்கோர் செய்திருக்கிறார் கயாடு லோஹர். தற்போது அதர்வா நடித்து வரும் இதயம் முரளி படத்திலும் அம்மணிதான் கதாநாயகி.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் ‘எனக்கு கெட்ட பசங்களைத்தான் மிகவும் பிடிக்கும். ஏனெனில், அவர்களை சுலபமாக நல்லவர்களாக மாற்றிவிட முடியும்’ என சொல்லி கொளுத்திப்போட்டார். அதோடு, தற்போது இவர் லைம் லைட்டிற்கு வந்திருப்பதால் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூக்கலான கவர்ச்சியில் கயாடு லோஹர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இனையத்தில் வைரலாகி வருகிறது. டிராகன் படத்தில் குடும்ப குத்தவிளக்காக இவரை பார்த்த ரசிகர்கள் இந்த கவர்ச்சியை பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.
