ARTICLE AD BOX
‘ஆர் யூ ஓகே பேபி’லாம் கல்யாணத்துக்கு முன்னாடிதான்.. இப்போ ‘ஐயோ பேபிமா பிலீவ் மீ’ மட்டும்தான்!
சென்னை : மனைவியை எதிர்த்துப் பேச நம்மூர் கணவர்களுக்கு வீரம் வருவதே அதிசயம்.. ஆனால் அந்த சமயத்திலும் பூரிக்கட்டையும், துடைப்பமும் நினைவுக்கு வந்து தங்களைக் கோழையாக்கி விடுவதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
கணவர்கள் கொடுமைப்படுத்துவதாக ஊடகங்களில் செய்திகள் வருவது போலவே, மனைவிகள் கொடுமைப்படுத்துவதாகவும் செய்திகள் வரத்தான் செய்கின்றன. அதிலும் குறிப்பாக நம் சினிமாவில் கணவர்கள் கொடுமைப்படுத்தும் காட்சிகளை வில்லத்தனமாகவும், மனைவி கணவரை கொடுமைப்படுத்தும் காட்சிகளை காமெடியாகவும் மாற்றி விடுகின்றனர்.

அதனால்தான், அடிக்கடி சமூகவலைதளப் பக்கங்களில் கணவன் -மனைவி கொடுமைகள் பற்றிய மீம்ஸ்கள் டிரெண்டிங்காகி விடுகின்றன. இப்போதும் அப்படித்தான், "'ஆர் யூ ஓகே பேபி'லாம் கல்யாணத்துக்கு முன்னாடிதான்.. இப்போ 'ஐயோ பேபிமா பிலீவ் மீ' மட்டும்தான்!" என்றும், "வீரமும், துணிவும் வரும்போதெல்லாம்.. பூரிக்கட்டையும், துடைப்பமும் வேற நினைவுக்கு வருதே!" என்றும் விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக....








