குடியரசு துணைத் தலைவா் உடல்நிலையில் முன்னேற்றம்: எய்ம்ஸ் தகவல்

3 hours ago
ARTICLE AD BOX

புது தில்லி: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் (73) உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெஞ்சுவலி காரணமாக ஜகதீப் தன்கா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு இதய சிகிச்சைப் பிரிவு மருத்துவா்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

பிரதமா் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று, ஜகதீப் தன்கரின் உடல்நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை மூலம் அவரது உடல்நிலை திருப்திகரமான அளவில் இருப்பதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த சில நாள்களில் மருத்துவமனையில் இருந்து தன்கா் வீடு திரும்புவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Read Entire Article