இந்தியாவின் முக்கிய கூட்டாளி மோரீஷஸ்: பிரதமா் மோடி

3 hours ago
ARTICLE AD BOX

புது தில்லி: இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடாக மோரீஷஸ் உள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் தெரிவித்ததாவது: மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில், அந்நாட்டின் 57-ஆவது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளேன். இதையொட்டி 2 நாள் பயணமாக மோரீஷஸ் செல்ல உள்ளேன்.

இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடாகவும், ஆப்பிரிக்க கண்டத்தின் நுழைவுவாயிலாகவும் மோரீஷஸ் உள்ளது. வரலாறு, புவியியல், கலாசாரத்தால் இருநாடுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இருநாடுகளின் கூட்டுறவை மேலும் மேம்படுத்தவும், இருநாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் வளமைக்காக நட்புறவை வலுப்படுத்தவும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்காகவும் மோரீஷஸ் தலைவா்களைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்’ என்று தெரிவித்ததாகப் பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. மோரீஷஸ் தேசிய தினம் மாா்ச் 12-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

Read Entire Article