ARTICLE AD BOX
பலருக்கும் நடக்கும்போது குதிகாலில் வலி, முள் குத்துவது போன்ற வலி இருக்கும், அவர்கள் ஆமணக்கு இலை, பூண்டு சேர்த்து அரைத்து சுடு தண்ணீரில் கழுவினால் கால் பாதம் வலிக்கு தீர்வு கிடைக்கும் என்று டாக்டர் சயனா விவேக் ஆலோசனை கூறுகிறர்.
குதிகால் வாதம், குதிகால் வலிக்கான தீர்வுகளை ஹரித்ரா ஹோலிஸ்டிக் ராயல் ஆயுர்வேதிக் ட்ரீட்மெண்ட் யூடியூப் சேனலில் டாக்டர் சயனா விவேக் கூறியிருக்கிறார்.
டாக்டர் சயனா விவேக் கூறுகையில், “நாம் இன்றைக்கு குதிகால் வாதம் பற்றி பார்ப்போம். குதிகால் வாதத்தை வாத கண்டகம் என்றும் ஆயுர்வேதத்தில் சொல்வோம். கண்டகம் என்பது முள்ளைக் குறிக்கிறது. வாதத்தினால் வருகிற குத்தல் வலியை வாத கண்டகம் என்று சொல்வோம். கால்கெனய்ல் (calcaneal) என்று சொல்லப்படுகிற கால் பகுதியில் இருக்கிற எலும்பில் வலி ஏற்படுகிறது. இந்த வியாதி ஏற்படுவதற்கான காரணங்கள், ரொம்ப நேரம் சமமாக இல்லாத இடத்தில் நிற்பது, நடப்பது சாஃப்ட்டா இல்லாமல் ரொம்ப ஹார்டா காலணி, ஹீல்ஸ் காலணி, ஷூஸ் பயன்படுத்தி ரொம்ப நேரம் நிற்பதனால், கால்கெனய்ல் (calcaneal) எலும்பில் ரொம்ப அழுத்தம் வரும்போது கால்சியம் டெபாசிட் ஆகி ஒரு எலும்பு மாதிரியே வெளியே தள்ளிவரும். அதனால், நமக்கு வலி இருக்கும். அதனால், நாம் ரொம்ப நேரம் நடக்கும்போது, நிற்கும்போது, அதே மாதிரி ஓடும்போது எல்லாம் நமக்கு வலி அதிகமாக இருக்கும். இல்லையென்றால், நாம் ரொம்ப நேரம் ஒரு இடத்தில் உட்கார்ந்துவிட்டு திடீரென எழுந்திருக்கும்போது வலி இருக்கும். காலையில் எழுந்த உடன் தரையில் கால் வைக்கும்போது வலி ரொம்ப அதிகமாக இருக்கும்.
இந்த பிரச்னைக்கு நாம் வீட்டில் என்ன செய்யலாம் என்றால், நாம் சாஃப்ட்டான காலணி ஷூஸ் பயன்படுத்துவது வலியைக் குறைக்கும். அதே மாதிரி ரொம்ப நேரம் நின்றுகொண்டிருக்கிற வேலையையும் நாம் குறைக்க வேண்டும். கொஞ்சம் உக்கார்ந்து வேலை செய்தால் நன்றாக இருக்கும். போதுமான அளவு ஓயு கொடுக்க வேண்டும்.
அதே நேரத்தில், இதற்கு சிகிச்சையாக வாத ஹரமான எண்ணெய்களைத் தடவலாம். ரொம்ப வலி இருக்கிறது என்றால் அந்த வாதத்தைக் குறைக்கிற மாதிரி, மூலிகைகள் போட்டு எண்ணெய்க் காய்ச்சி பயன்படுத்தினாலும் அது நன்றாக இருக்கும். அந்த எண்ணெயைத் தடவி கொஞ்சம் அழுத்தம் கொடுத்து மசாஜ் பண்ணலாம். இதை அப்யந்தம் என்று சொல்வோம். பாதத்தை அப்யந்தம் செய்வது கொஞ்சம் தேவைப்படும். கொஞ்சம் நல்லெண்ணெய் பயன்படுத்தலாம், இல்லையென்றால், நொச்சி இலை போட்டு எண்ணெயைக் காய்ச்சில் வீட்டிலேயே செய்யலாம்.
அதே போல, ரொம்ப வலி இருக்கிறது என்றால், சுடு தண்ணீரில் கொஞ்ச நேரம் கால் வைப்பதனால், நமக்கு அந்த வலி குறையும். ஆமணக்கு இலையை அரைத்து, பூண்டு அரைத்து அந்த இலையை மேலே தடவிய பிறகு, கொஞ்ச நேரம் காய வைத்து சுடுதண்ணீரில் கழுவிவிடலாம்.
அதே மாதிரி, ஆயுர்வேதத்தில் ஒத்தடம் கொடுப்போம். எண்ணெய் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து கிழி கொடுப்போம். கிழி போட்டு வீக்கத்தைக் குறைப்பதற்கு, இருக்கிற வலியைக் குறைப்பதற்கு ரொம்ப உதவியாக இருக்கும். இன்னொன்று, கஷாயம் போட்டு அதில் காலை ஊற வைத்து என நிறைய சிகிச்சை பண்ணலாம்.
அதே மாதிரி உள்ளுக்கும் வாத ஹரமான மருந்துகள் கொடுக்க வேண்டும். குதிகால் வாதத்தால் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் என்றால் உள்ளேயும் கொஞ்சம் மருந்துகொடுத்து சரி பண்ண வேண்டும்.
இந்த சிகிச்சைகளுக்கு மேல், ஆயுர்வேதத்தில் அக்னி கர்மா என்று தெரபி இருக்கிறது, அதை பண்ணலாம். அதே மாதிரி, ரத்த மோக்ஷம் என்று சொல்லக்கூடிய தெரபி இருக்கிறது அதை செய்வதும் ரொம்ப உதவிகரமாக இருக்கும். அதே போல, இந்த குதிகால் வாதத்திற்கு கால் பாதங்களுக்கான பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து வலி கொஞ்சம் குறையும். குதிகால் வாதம், குதிகால் வலி இருக்கிறது என்றால் தங்கள் மருத்துவமனையில் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்” என்று டாக்டர் சயனா விவேக் கூறியுள்ளார்.