சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக சாதனை படைத்த பாகிஸ்தான்

9 hours ago
ARTICLE AD BOX

ஆக்லாந்து,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற 3 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 19.5 ஓவர்களில் 204 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 94 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டுகளும், ஷாகீன் அப்ரிடி, அப்ரார் அகமது மற்றும் அப்பாஸ் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 205 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 16 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 207 ரன் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 105 ரன்களும், கேப்டன் சல்மான் ஆஹா 51 ரன்களும் குவித்தனர். ஹசன் நவாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெறும் 16 ஓவர்களில் 205 ரன்களை சேசிங் செய்து அசத்தியது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200+ ரன்களை அதிவேகமாக சேசிங் செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.

இதற்கும் முன்னர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி 17.4 ஓவர்களில் 206 ரன்களை சேசிங் செய்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள பாகிஸ்தான் புதிய உலக சாதனை படைத்துள்ளது.



Read Entire Article