ARTICLE AD BOX
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுடைய நலனை பாதுகாக்கவும், ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம்’ அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தில் துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவுபெற்ற நிலையில், தற்போது நீதிபதி ச.தமிழ்வாணன் தலைவராகவும் மற்றும் ஜெ.ரேகா பிரியதர்ஷினி உறுப்பினராகவும் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, இந்த ஆணையத்திற்கு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் இமயம் (வெ.அண்ணாமலை – கடலூர் மாவட்டம்) துணைத்தலைவராகவும், செ.செல்வகுமார், (கோயம்புத்தூர் மாவட்டம்), சு.ஆனந்தராஜா (தஞ்சாவூர் மாவட்டம்), மு.பொன்தோஸ் (நீலகிரி மாவட்டம்) மற்றும் பொ.இளஞ்செழியன் (திருநெல்வேலி மாவட்டம்) ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணைய துணைதலைவர், 4 உறுப்பினர்கள் நியமனம் appeared first on Dinakaran.