ARTICLE AD BOX
அள்ளிட்டு போங்க.. கம்மி பட்ஜெட்டில் கிடைக்கும் 43 இன்ச் டிவிகள்.. கூகுள் டிவி OS.. 16ஜிபி மெமரி..
இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் தற்போது போட்டிப்போட்டுக் கொண்டு 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை (Smart TV) பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகின்றன. அதுவும் 32 இன்ச் மற்றும் 40 இன்ச் டிவிகளை வாங்குவதை விட 43 இன்ச் டிவிகளை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. சரி இப்போது கம்மி பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த 43 இன்ச் டிவிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே டிவி (acerpure Aspire TV 4K 43) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.17749 விலையில் வாங்கிவிட முடியும்.

குறிப்பாக கிரிஸ்டல் கிளியர் பிக்சர் குவாலிட்டி (crystal-clear picture quality), டால்பி அட்மாஸ் ஆதரவு, 16ஜிபி மெமரி, கூகுள் டிவி ஓஎஸ், 2ஜிபி ரேம், ரியல்டெக் ஏஆர்எம் பிராசஸர் (RealTek ARM processor), மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ், எச்டிஎம்ஐ 2.0 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், ப்ளூடூத் வி5.0, டூயல்-பேண்ட் வைஃபை, ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே டிவி மாடலில் உள்ளன.
43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Infinix 43 inch QLED Full HD Smart Google TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.16,999 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் எச்டிஆர் 10 (HDR 10), குவாட் கோர் பிராசஸர் (QUAD Core Processor), மாலி 470 ட்ரிபிள் கோர் (Mali470 Triple Core) கிராபிக்ஸ், கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS), 1.5ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், டால்பி ஆடியோ (Dolby Audio), 40W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.
43 இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 4கே ஸ்மார்ட் டிவி (Motorola EnvisionX 43 inch 4K Smart TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.
எச்டிஆர் (HDR10) ஆதரவு, 16.7 மில்லயன் கலர்ஸ், 7 பிக்சர் மோட் ( 7 picture modes), மீடியாடெக் 9602 பிராசஸர், கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS), 1.5ஜிபி ரேம் , 8ஜிபி மெமரி, வாய்ஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் குரோம்காஸ்ட், டால்பி டிஜிட்டல், டால்பி டிஜிட்டல் பிளஸ், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.

43 இன்ச் தாம்சன் ஜியோ டிவி (Thomson Jio TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 4கே கியூஎல்இடி டிஸ்பிளே, ஜியோடெலி ஓஎஸ் (JioTele OS), ஆம்லாஜிக் பிராஸசர் (Amlogic processor), டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), சரவுண்ட் சவுண்ட் (Surround Sound), 40W ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த தாம்சன் டிவி.
43 இன்ச் ஹைசென்ஸ் ஸ்மார்ட் டிவி (Hisense 43 inch Smart Google TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. குறிப்பாக எச்டிஆர் 10, டால்பி ஆடியோ, 30W ஸ்பீக்கர்கள், 8ஜிபி மெமரி உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.