மிரளுது டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.15,999 போதும்.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

3 hours ago
ARTICLE AD BOX

மிரளுது டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.15,999 போதும்.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

Mobile
oi-Harihara Sudhan
| Published: Thursday, March 6, 2025, 19:08 [IST]

இந்திய மார்கெட்டில் சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே,44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் ரூ.19,999 பட்ஜெட்டில் வெளியான ஐக்யூ இசட்9 5ஜி (iQOO Z9 5G) போனானது இப்போது வெறும் ரூ.15,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. 2 ஓஎஸ் அப்டேட், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட பீச்சர்களை கொடுக்கும் இந்த ஐக்யூ இசட்9 5ஜி போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஐக்யூ இசட்9 5ஜி அம்சங்கள் (iQOO Z9 5G Specifications): இந்த ஐக்யூ போனில் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படியான ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 (Octa Core 4nm MediaTek Dimensity 7200) சிப்செட் மட்டுமல்லாமல், மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. 2 அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உள்ளது.

மிரளுது டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.15,999 போதும்.. SONY கேமரா.. 5000mAh!

ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) பெற்று கொள்ளலாம். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த வேரியண்ட்களில் 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 1 டிபி மெமரிக்கான எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) பெற்று கொள்ளலாம்.

இந்த ஐக்யூ இசட்9 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) வருகிறது. ஆனால், சென்சார்கள் மற்றும் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜிகளில் பிரீமியம் காட்டுகிறது. அதாவது, சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மட்டுமல்லாமல் ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) கிடைக்கிறது.

இதுபோக 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்துள்ளது. இந்த ஐக்யூ போனின் டிஸ்பிளேவை குறை சொல்ல முடியாது. ஏனென்றால், 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மட்டுமல்லாமல், டிடி ஸ்டார்2 கிளாஸ் (DT Star2 Glass) புரொடெக்சன் கொடுக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது.

இதுபோக 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஓடிடி பிரியர்கள் எதிர்பார்க்கும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொடுக்கிறது. ரூ.20000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கும்படியான பேட்டரி சிஸ்டம் இந்த பட்ஜெட்டில் உள்ளது. ஆகவே, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 5000mAh பேட்டரி கிடைக்கிறது.

இந்த ஐக்யூ இசட்9 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.21,999ஆகவும் இருக்கிறது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.18,499ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.2,500 டிஸ்கவுண்ட் வருகிறது.

ஆகவே, ரூ.15,999 பட்ஜெட்டில் இந்த போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ரூ.2.500 டிஸ்கவுண்ட் பெறுவதற்கு எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு தேவைப்படுகிறது. ஈஎம்ஐ அல்லது ஃபுல் கேஷ் ஆப்ஷன்களுக்கும் ரூ.2,500 டிஸ்கவுண்ட் பொருந்துகிறது. இந்த போனை கிராபென் ப்ளூ (Graphene Blue) மற்றும் ப்ரஷ்டு கிரீன் (Brushed Green) கலர்களில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
26 Percent Discount on iQOO Z9 5G With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Read Entire Article