ARTICLE AD BOX
இன்னும் இரண்டே வெற்றிகள் தான்.. சாம்பியன்ஸ் கோப்பையோடு தாயகம் திரும்பிவிடும் இந்திய அணி. அதற்கான முதல் பலப்பரீட்சையை ஆஸ்திரேலியாவுடன் நடத்தவுள்ளது இந்திய அணி.
இந்திய அணி எப்படி இருக்கிறது?
ரோகித் ஷர்மா, விராட் கோலி இவர்கள் இருவரும் தங்கள் ஆழ்திறமையை காட்டிவிட்டாலே போதும் பாதி வெற்றி நம்கைகளில் வந்துவிடும். மீதி வெற்றியை பார்த்து கொள்ள
சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் மத்திய வரிசையில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் ஆகியோரின் ஆல்ரவுண்ட் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையிலேயே உள்ளது.
பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முஹமது ஷமி, அடுத்த இரண்டு போட்டிகளில் சோபிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணியுடனான
போட்டியில் அவரது பந்துவீச்சு எந்தளவுக்கு இருக்கும் என்பதை உறுதியிட்டுச் சொல்ல முடியாத நிலையில் உள்ளது.
வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. நியுசிலாந்து அணிக்கு எதிராக கிடைத்த வாய்ப்பில் 5 விக்கெட்டுகளை சாய்த்து எதிரணியை கிறங்கச் செய்தியிருக்கிறார் வருண்.
அதேவேளையில் தொடரில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்திய ஹர்ஷித் ரானாவுக்கு களமிறங்கும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து காண வேண்டும்.
இந்தியா vs ஆஸ்திரேலியா மோதலில் என்ன நடந்தது?
இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் 151 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 84 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. 57 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. 10 போட்டிகள் முடிவில்லாதவை.
உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்கள் என்றாலே ஆஸ்திரேலியாவுக்கே வெற்றிகள் சாத்தியமான நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை முடிவுகள் இந்திய அணிக்கு நேர்மறையான எண்ணத்தை விதைக்கச் செய்கின்றன.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் 4 முறை மோதியுள்ளன. இதில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்றிருக்கிறது. ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்து போயுள்ளது.
இவ்விரு நாடுகளுக்கு இடையே வெளிநாடுகளில் நடைபெற்ற
போட்டிகளில் 12 போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 10
போட்டிகளில் இந்தியா வென்றிருக்கிறது.