ARTICLE AD BOX
டெல்லியை ஒட்டியுள்ள ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ஐஎஸ்ஐ- உடன் திடர்புடையதாகக் கூறப்படும் அப்துல் ரஹ்மான், ராமர் கோயிலை வெடிக்கச் செய்வதாக மிரட்டல் விடுத்து இருந்தார். இந்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையின் போது, அப்துல் ராமர் கோவிலுக்கு இரண்டு முறை சென்று பார்த்ததாகக் கூறப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் மீது வீச இரண்டு கையெறி குண்டுகள் அவருக்கு வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர் குற்றத்தைச் செய்வதற்கு முன்பாக குஜராத்தின் பயங்கரவாத கட்டுப்பாட்டுப்படை மற்றும் ஹரியானா சிறப்பு தீவிரவாத அமைப்பினரால் அவர் கைது செய்யப்பட்டார். அவர்கள் நடத்திய விசாரணையின் போது, அவருக்கு இந்தச் செயலை செய்ய உத்தரவிட்ட ஐ.எஸ்.ஐ அமைப்பினர் குழுவில் உள்ள ஒருவர் மூலம் இந்த கைக்குண்டை தனக்கு அனுப்பி வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ரஹ்மானிடம் இருந்து கைக்குண்டுகளை உளவுத்துறையினர் மீட்டுள்ளனர். உளவுத்துறையினர் கூறுகையில், ”இந்த கையெறி குண்டு மீது எந்த நாட்டின் நிறுவன முத்திரையும் இல்லை. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, அப்துல் ரஹ்மான் பாகிஸ்தானில் உள்ள ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார். விசாரணையின் போது அவர் டெல்லியில் உள்ள ஜமாத்தில் சேர பைசாபாத்திலிருந்து ரயிலில் வந்ததாகக் கூறினார். ஜமாஅத்தின் போது தான் அவருக்கு ஐ.எஸ்.ஐ அமிப்பிஅனருடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது அப்துல் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதைக் கண்டுபிடிக்க விசாரணை அமைப்புகள் முயற்சி செய்கின்றன.
உளவுத்துறை அமைப்புகளின் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட அப்துல் ரஹ்மான், ராமர் கோயிலைத் தாக்குவதற்கான வெடிகுண்டு அனுப்பப்பட்டதகவும், ஆனால் சரியான வாய்ப்பு வரும் வரை ஃபரிதாபாத்தில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறினார். இந்தச் சதியில் அப்துல்லாவைத் தவிர வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். இந்த வரிசையில், போலீசார் அப்துலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேலும் விசாரணைக்காக 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.