ARTICLE AD BOX
அமலா பாலுக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய கணவர்.. குழந்தைக்குத்தான் முதல் உரிமையாம்!
சென்னை: நடிகை அமலாபால் மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சி ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவருக்கு சொகுசு கார் ஒன்றை அவரது இரண்டாவது கணவர் ஜெகத் தேசாய் வழங்கி உள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
மலையாளத்தில் வெளியான நீலத்தாமரா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால். தமிழில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். அமலாபால் நடித்த முதல் படமே சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவருக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று தந்த படமாக மைனா திரைப்படம் மாறியது.

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான அந்த படம் அமலாபால் மற்றும் நடிகர் விதார்த்க்கு வெற்றி படமாக மாறியது. அந்த படத்தை தொடர்ந்து அமலா பால் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் ஏ.எல். விஜய்யுடனான முதல் திருமணம் முடிவுக்கு வந்த நிலையில், தமிழ் சினிமாவில் இருந்து சற்றே விலகி இருக்கும் அமலா பால் இரண்டாவதாக ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தை ஒன்றுக்கு அம்மாவாகவும் மாறி உள்ளார்.
அமலா பாலுக்கு சொகுசு கார் பரிசு: அமலா பால் நடிப்பில் கடந்த ஆண்டு மலையாளத்தில் பிருத்திவிராஜ் நடித்த ஆடுதீவுதம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 150 கோடி ரூபாய்க்கு மேல் அந்த திரைப்படம் வசூல் செய்தது. கர்ப்பமாக இருந்த நிலையிலும், படத்தின் புரோமோஷனுக்கு அமலா பால் சென்று வந்தார். தனது கணவருடன் ஜாலி டூர் அடித்து வரும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த அமலாபாலுக்கு தற்போது, அவரது கணவர் சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். கார் பரிசை பார்த்ததும் அவரது கணவரை கட்டிப்பிடித்து அப்படியே முத்தமழை பொழிந்துவிட்டார் அமலா பால்.
முதல் உரிமை குழந்தைக்குத் தான்: நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் வாங்கிக் கொடுத்த காரில் இருந்து இறங்கி வந்து முதலில் கணவர் கையில் இருக்கும் குழந்தையை வாங்கிக் கொஞ்சுகிறார். அந்த வீடியோவை வெளியிட்டு அதற்கு கேப்ஷனாக முதலில் பேபி அடுத்து தான் பேப் என 2வது கணவருக்கு இரண்டாவது இடம் தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வரி ஏய்ப்பு சர்ச்சை: கடந்த 2017 ஆம் ஆண்டு மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரை நடிகை அமலா பால் வாங்கிய நிலையில், அதற்கான ரெஜிஸ்ட்ரேஷனை புதுச்சேரியில் செய்திருந்தார். அந்த காருக்கு உரிய வரி செலுத்தவில்லை என்றும் அமலாபால் வரி ஏய்ப்பு செய்தார் என்றும் அப்போது சர்ச்சைகள் வெடித்தன. அதன் பின்னர், அதனை எல்லாம் சரி செய்தார் அமலா பால். புதிதாக அமலா பால் கார் வாங்கியுள்ள நிலையில், இதற்கு உரிய டேக்ஸ் எல்லாம் கட்டிவிட்டீங்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அமலா பாலுக்கு ஆசை கணவர் கார் வாங்கி கொடுத்த நிலையில், அதை பார்த்த அவரது ரசிகர்கள் கார் சூப்பராக இருக்கும் இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.