ARTICLE AD BOX
Jyotika: உச்சகட்ட கோபத்திலும் சூர்யாவின் கண்களைப் பார்த்தால்.. ஜோதிகா சொன்ன குடும்ப விஷயம்!
சென்னை: நடிகை ஜோதிகா இப்போது பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவர் குறித்த தகவல்களை அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள ரசிகர்கள் எப்போதும், ஆவலுடன் இருந்து வருகிறார்கள். அப்படித்தான் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சூர்யா குறித்து அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது.
ஜோதிகா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள டப்பா கார்டல் வெப் சீரிஸ், நெட்பிளிக்ஸில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் ஜோதிகாவும் சூர்யாவும் மும்பைக்கு குடும்பமாக குடியேறி விட்டார்கள். அதாவது, ஜோதிகா, சூர்யா அவர்களின் குழந்தைகள் தேவ் மற்றும் தியா ஆகியோர் என அவர்களின் குடும்பம் மட்டுமே மும்பைக்கு ஷிஃப்ட் ஆகியுள்ளார்கள்.

இதற்கு காரணம் குழந்தைகளின் கல்வி எனக் கூறப்பட்டாலும், பலரும் சிவக்குமாருக்கும் ஜோதிகாவுக்கும் இடையில் பிரச்னை எனக் கூறுகிறார்கள். ஆனால் அது தொடர்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் கிசு கிசுக்கள் உலா வருகிறது. மேலும் ஜோதிகா தனது அம்மாவுடன் இருக்க விருப்பப்பட்டு மும்பைக்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா - ஜோ: இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது காதல் கணவர் சூர்யா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், " எனக்கு சில நேரங்களில் கோபம் வரும். அந்த நேரங்களில் சூர்யாவை கோபத்துடன் திட்டலாம் என அவரைப் பார்ப்பேன். ஆனால் அவரது கண்கள் மிகவும், அழகாக இருக்கும் என்பதால் என் கோபம் எல்லாம் காணாமல் போய்விடும்.

மேஜிக்: இது தொடர்பாக நான் சூர்யாவிடமே கூறிவிட்டேன், உங்களுக்கு அழகான முகம் உள்ளது. அதனால்தான் என்னால் என் கோபத்தைக் கூட உன்னிடத்தில் காட்ட முடியவில்லை என்பதை நான் அடிக்கடி சூர்யாவிடம் கூறுவேன். சூர்யா என் வாழ்க்கையில் நடந்த மேஜிக்" எனக் கூறினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பாலிவுட்: சூர்யாவும் மும்பைக்கு ஷிஃப்ட் ஆகியுள்ளதால், அவர் பாலிவுட் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது. அதனால்தான் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க கமிட் ஆன புறநானூறு படத்தில் இருந்தும் விலகினார். இப்போது இந்த படம் பராசக்தி என்ற பெயரில் படப்பிடிப்பில் உள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார்.

ஆணாதிக்கம்: நடிகை ஜோதிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், தென்னிந்திய சினிமா குறித்து பேசியுள்ளார். அதாவது, " தென்னிந்திய சினிமா ஒரு ஆணாதிக்க சினிமா உலகமாக உள்ளது. பாலிவுட் சினிமாவோடு ஒப்பிடும்போது தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம். அங்கு எழுதப்படும் பெரும்பான்மையான கதைகள் ஆண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எழுதப்படும். பெண் கதாபாத்திரங்கள் வெறுமனே கதாநாயகனுக்கு ஜோடியாக மட்டும் எழுதப்படும். கதாநாயகிகள் கதாநாயகர்களுடன் நடனம் ஆடுவதும், கிறுக்குத்தனமாக ஏதாவது செய்வதுமாக மட்டுமே இருக்கும். இப்போதும் அவை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
மன மாற்றம்: நானுமே அப்படி நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் இதனை நான் புரிந்து கொண்டு அதில் இருந்து என்னை மாற்றி நடித்துக் கொண்டு உள்ளேன். எனக்கு இந்த புரிதல் வந்த பின்னர், நான் தேர்வு செய்யும் படங்களும் கதைகளுமே என்னை இங்கு கொண்டு வந்து இப்போது நிறுத்தியுள்ளது. எனது 28 வது வயதில் இருந்தே எனக்கு இந்த பார்வை இருந்ததால், அதன் பின்னர் நான், வெகு சில கதைகளில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டேன்" இவ்வாறு ஜோதிகா பேசியுள்ளார்.