ARTICLE AD BOX

நடிகை தமன்னா விஜய் வர்மாவை காதலிப்பதாக சில வருடங்களுக்கு முன்பாக கிசுகிசுக்கப்பட்டது. அவர்கள் பார்ட்டியில் முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் போட்டோவும் இணையத்தில் வைரலானது. அதன் பிறகு தான் அவர்கள் தங்களுடைய காதலை வெளிப்படையாக பொதுவெளியில் அறிவித்தார்கள். பின்பு ஜோடியாக வெளியே சுற்ற ஆரம்பித்தார்கள். ஆனால் தற்போது தமன்னாவும், விஜய் வர்மாவும் பிரேக்கப் செய்து கொண்ட தாக பாலிவுட் மீடியாக்களில் தொடர்ந்து செய்தி வெளிய வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் ஒன்றாக ஹோலி கொண்டாடி இருக்கிறார்கள். நடிகை ரவீனா டான்டன் வீட்டில் தான் அவர்கள் ஹோலி கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் தமன்னா விஜய் வர்மா இருவரும் நிஜமாகவே பிரிந்து விட்டார்களா? அல்லது பிரேக்கப் என்பது வதந்தியா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.