ARTICLE AD BOX

Dragon: கோமாளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பின் லவ் டுடே படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஹிட் அடித்து பிரதீப் ஆந்திர ரசிகர்களிடமும் பிரபலமானார்.
இயக்குனராக ஒரு படம், ஹீரோவாக ஒரு படம் என ஹிட் கொடுத்துவிட்டதால் பிரதீப்பை வைத்து படமெடுக்க மற்ற இயக்குனர்கள் முன் வந்தார்கள். நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.சி என்கிற படம் துவங்கப்பட்டது. Life Insurance Company என விளக்கமும் சொன்னார்கள். ஆனால், எல்.ஐ.சி நிறுவனம் எதிர்ப்பு தெரிவிக்க எல்.ஐ.கே என மாற்றிவிட்டார்கள்.
இந்த படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படம் உருவான போதே ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்கிற படத்தில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் எல்.ஐ.கே படம் அப்படியே நின்று போனது. அந்த படம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஒருபக்கம், டிராகன் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துவிட்டது. அதுவும் 100 கோடிக்கும் மேல் வசூலித்து 2025ம் வருடத்தில் அதிக வசூலை பெற்ற தமிழ் படம் என்கிற பெருமையை இப்படம் பெற்றிருக்கிறது. எனவே, இந்த வெற்றியை விக்னேஷ் சிவன் பயன்படுத்திகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், ஒரு படத்தின் வெற்றி அடுத்து அதே ஹீரோ நடிக்கும் படத்தின் வியாபாரத்திற்கு உதவும்.
ஆனால், எல்.ஐ.கே. டேக் ஆப் ஆகுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், ஏற்கனவே படத்திற்கு 30 கோடி செலவு செய்துவிட்டார் விக்னேஷ் சிவன். இன்னும் 12 கோடி வேண்டும் என சொல்ல தயாரிப்பாளர் லலித் அதை ஏற்கவில்லை. ‘இனிமேல் என்னால் செலவு முடியாது. இதுவரை ஆன 30 கோடியை கொடுத்துவிட்டு படத்தை நீங்களே படத்தை எடுத்து கொள்ளுங்கள்’ என சொல்லிவிட்டாராம்.

எனவே, என்ன செய்வதென்று யோசித்து வருகிறார் விக்னேஷ் சிவன். டிராகன் படம் ஓடிவிட்டதால் இந்த படத்தை தயாரிக்க வேறு ஒரு தயாரிப்பாளர் முன் வந்தால் எல்.ஐ.கே டேக் ஆப் ஆக வாய்ப்பிருக்கிறது. அல்லது பிரதீப்புக்கு 100 கோடி வியாபாரம் இருப்பதால் விக்னேஷ் சிவனே தனது ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. டிராகன் ஹிட் கொடுத்தும் அடுத்த படம் இப்படி சிக்கலில் மாட்டிக்கொண்டதில் பிரதீப்புக்கு ஏகப்பட்ட வருத்தம் இருக்கிறதாம். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.