அனைவரும் எதிர்பார்த்த கூலி படத்தின் டீசர்.. எப்போது ரிலீஸ் தெரியுமா

1 day ago
ARTICLE AD BOX

கூலி

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சோப்பின் சபீர், உபேந்திரா ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் நடிகை பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

டீசர் அப்டேட்

இந்த நிலையில், கூலி திரைப்படத்தை டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக டீசர் எப்போது வெளிவரும் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இன்னும் இரண்டு வாரங்களில் கூலி படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.

இப்படத்தின் டீசர் படக்குழு பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும், இன்னும் இரண்டே வாரத்தில் கூலி டீசர் வெளிவரும் என்றும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Read Entire Article