அண்ணாமலைக்கு சால்வை போட முயன்ற நிர்வாகி.! தடுத்து தூக்கி எரிந்த கே.பி.ராமலிங்கம்- பாஜக ஷாக்

3 days ago
ARTICLE AD BOX

திமுக- பாஜக மோதல்

தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவிற்கு பெரும் சவாலாக பாஜக உள்ளது. தமிழக அரசு மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் என்ற வாசகத்தை டிரெண்ட் செய்து வருகிறார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்தித்த அண்ணாமலை "நாளை(இன்று) காலை நான் Get Out Stalin என ட்வீட் பதிவிட போகிறேன். அது எவ்வளவு போகப்போகிறது என்று நீங்களே பாருங்கள்" என மீண்டும் சவால் விட்டிருந்தார். 

பாஜக நிர்வாகியை தடுத்த கேபி ராமலிங்கம்

இதனையடுத்து இன்று காலை 6 மணியளவில் தனது எக்ஸ் தளத்தில் கெட் அவுட் ஸ்டாலின் என்ற வாசகத்தை பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் சேலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சால்வை போடுவதற்கு வந்த நிர்வாகியிடமிருந்து கேபி.ராமலிங்கம் சால்வையை பறித்த போது அந்த நிர்வாகி தடுமாறி கீழே விழ சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சேலம் ஐந்துரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு  நேற்றைய தினம் வருகை தந்தார். அப்போது திருமண மேடையில் ஏராளமான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது அண்ணாமலை மேடைக்கு வந்த போது பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கமும் முன்பாக வந்தார்.  அந்த சமயத்தில் பாஜகவினர் மேடை மேலே நிற்கவேண்டாம் கீழே செல்லுமாறு மிரட்டல் விடுவது போன்று கே.பி. ராமலிங்கம் அனைவரையும் அதட்டிக்கொண்டிருந்தார்.

சால்வையை தூக்கி எறிந்த கேபி ராமலிங்கம்

அப்போது பாஜகவின் சேலம்முன்னாள் மாவட்ட பார்வையாளர் முருகேசன் என்பவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சால்வை போடுவதற்கு காத்திருந்தார். அப்பொழுது வேகமாக சென்ற கேபி.ராமலிங்கம், முருகேசன் கையில் வைத்திருந்த  சால்வையை பிடுங்கி போது கீழே வீசினார். அப்போது முருகேசன் நிலை தடுமாறி கிழே விழச்சென்றார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த பாஜகவினரிடையே  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் கேபி.ராமலிங்கத்தின்  செயல்பாட்டை கண்டித்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Read Entire Article