அண்ணாமலைக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கொடுத்த காரசாரமான பதிலடி

6 hours ago
ARTICLE AD BOX

Annamalai vs DK Shivakumar : மத்திய அரசு நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை செய்ய உத்தேசித்துள்ள நிலையில், அதனை மக்கள் தொகை அடிப்படையில் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும், இன்னும் 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாமே இந்த பிரச்சனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜக மட்டும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த சூழலில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட ஒட்டுமொத்த தென் மாநிலங்களுமே பாதிக்கப்படும். 

இதனால் ஏற்படப்போகும் சிக்கல்கள் குறித்து ஆராய்வதற்கும், மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை ஒத்தி வைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு இன்று சென்னையில் தென்மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்துகிறது. இதில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை சென்னை வந்த டிகே சிவக்குமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தொகுதி மறுவரையறையில் தென்மாநிலங்கள் எந்தவகையில் பாதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்போம். இப்படியான ஒரு முன்னெடுப்பை ஒருங்கிணைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு என கூறினார். அத்துடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காரசாரமான பதிலடியையும் கொடுத்தார்.

மேலும் படிக்க | கர்நாடகா துணை முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு வரவே கூடாது - அண்ணாமலை எச்சரிக்கை

அதாவது மேகதாதுவில் கர்நாடக நிச்சயம் அணை கட்டும் என அம்மாநில துணை முதலமைச்சரான டிகே சிவக்குமார் தொடர்ச்சியாக கூறி வருகிறார். அதற்கு தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கர்நாடகா மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சட்டப்படியாகவும், அரசியல் தளத்திலும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் மேகதாது அணை கட்டுவோம் என கூறும் டிகே சிவக்குமார் தமிழ்நாடு வந்தால் நிச்சயம் தமிழ்நாடு பாஜக கருப்புக்கொடி போராட்டம் நடத்தும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி, தமிழிசை தலைமையில் தமிழ்நாடு பாஜக கருப்புக்கொடி போராட்டம் நடத்தியது.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் டிகே சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜக நடத்தும் கருப்புக்கொடி போராட்டத்தை வரவேற்கிறேன். என்னை அவர்கள் திகார் சிறையில் அடைத்தபோதுகூட பயப்படாதவன், அவர்கள் நடத்தும் இந்த கருப்புக்கொடி போராட்டத்துக்கா நான் பயப்படப்போகிறேன். அவரை (அண்ணாமலை) எங்களுக்கு நன்றாக தெரியும். எங்கள் மாநிலம் கர்நாடகாவில் தான் அவர் பணியாற்றினார். எங்களுடைய பலம் என்ன என்று அவருக்கும் தெரியும். அதனால் அவருக்கு வாழ்த்துக்கள் என டிகே சிவக்குமார் கூறினார்.

மேலும் படிக்க | தமிழக அரசு வழங்கும் ரூ. 2000 உதவித்தொகை! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article