திருச்சி - சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

19 hours ago
ARTICLE AD BOX

திருச்சி - சென்னை தாம்பரம் இடையே 3 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, மார்ச் 29, 30, 31 ஆகிய நாள்களில் காலை 5.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

மறு மார்க்கத்தில் மாலை 3.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு 10.40 மணிக்கு திருச்சி சென்றடைகிறது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்க இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

The following Special Trains will be operated to clear extra rush of passengers during #Ramzan festival

Train No. 06048/06047 #Tambaram#Tiruchchirappalli – Tambaram Express Specials (3 days a week)

Advance Reservation will open at 08.00hrs on 23.03.2025#SouthernRailway pic.twitter.com/Aul5TnHIa5

— Southern Railway (@GMSRailway) March 22, 2025

இதேபோல் ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னை-போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article