கன்னட அமைப்புகள் இன்று பந்த் ஓசூர் வழியாக வழக்கம்போல் பஸ்கள் இயங்கியது

19 hours ago
ARTICLE AD BOX

ஓசூர்: கர்நாடக மாநிலம் பெளகாவியில் அம்மாநில அரசு போக்குவரத்து ஓட்டுநரை மராட்டிய ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது, மஹா தாயி நதிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தியும் இன்று கர்நாடக மாநில கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த போராட்டத்தால் கர்நாடக மாநில முழுவதும் பஸ் சேவை பாதிக்கப்படும், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் தமிழ்நாடு அரசு பஸ்களும், கர்நாடக அரசு பஸ்களும் ஓசூரில் நிறுத்தப்படும் என சமூகவலைதளங்களில் பரவி வந்தது.

இதுகுறித்து ஓசூர் பஸ் டிப்போ கிளை மேலாளர் கிருஷ்ணன் கூறுகையில், ஓசூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு வழக்கம் போல அனைத்து பஸ்களும் இன்று இயக்கப்பட்டு வருகிறது. ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆனைக்கல், மைசூர், மாண்டியா, தர்மஸ்தலா, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 700 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மாநில எல்லை பகுதியில் உள்ள கிராமங்கள், நகரங்களுக்கு 20 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன என்றார்.

 

The post கன்னட அமைப்புகள் இன்று பந்த் ஓசூர் வழியாக வழக்கம்போல் பஸ்கள் இயங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article