ARTICLE AD BOX

அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் படகுழுவால் அறிவிக்கப்பட்டது. அதாவது ரம்யா என்ற ரோலில் த்ரிஷா நடிக்கிறாராம். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த படங்கள் குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஜீ, கீரிடம், மங்காத்தா, என்னை அறிந்தால், விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ஆகிய ஆறு படங்களில் திரிஷா-அஜித் கூட்டணி இணைந்துள்ளது. இந்த ஆறு படங்களிலுமே அஜித் வெவ்வேறு கெட்டப்களில் உள்ளார். எனவே அஜித் படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்தாலே அந்த படத்தில் அஜித்திற்கு குறைந்தது இரண்டு கெட்டப்பாவது இருக்கிறது. அந்தவகையில் குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு மூன்று கெட்டப்புகள் உள்ளது. இந்த சுவாரஸ்யமான தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.