ARTICLE AD BOX
கட்டுக்கதைகளுக்கும், வன்மமான செய்திகளுக்கும் கவலைப்படாமல் தனக்கும், அஜித்துக்கும் இடையே சீரான நட்பு இருந்து கொண்டிருப்பதாக இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.
நடிகர் அஜித்குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’விடாமுயற்சி’. த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
மீகாமன், தடையறத்தாக்க, தடம் போன்ற க்ரைம் த்ரில்லர் கதைகளை எடுப்பதில் மகிழ்திருமேனி பெயர்போனவர் என்பதால் ’விடாமுயற்சி’ படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.
அதன்படி வெளியான படத்தின் டிரெய்லர் ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இரண்டு மடங்காகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தீயாக பேக்ரவுண்ட் இசையில் அனிருத் மிரட்டியிருக்கும் சூழலில், வெளியான சவதீகா மற்றும் பத்திகிச்சு பாடல்களும் டிரெண்டிங்கில் சம்பவம் செய்துவருகின்றன. படமானது வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகளவில் திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.
இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ஆணாதிக்கம், பெண்களுக்கு எதிரான பண்பாட்டுச் சூழல் போன்றவற்றில் அஜித் குமார் உடன்பாடு இல்லாதவர் என்பதால், அந்த கருத்தில் ஒரு படத்தைச் செய்ய விரும்பியதாகவும், இந்த அம்சங்களை எல்லாம் கலந்த படமாக விடாமுயற்சி இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அஜித்திடம் தங்கள் கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்ட போது, அவர் அர்ஜூன் என்று வைக்க விரும்பியதாகவும் கூறினார்.