ARTICLE AD BOX
விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி அப்படம் தள்ளிப்போனதால் அப்செட்டில் இருந்த தன்னை அஜித் சொன்ன வார்த்தைகள் மெருகேற்றியதாக கூறி உள்ளார்.
தடம், தடையற தாக்க, மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, நடிகர் அஜித்குமார் உடன் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் விடாமுயற்சி. இப்படத்தில் நடிகர் அஜித்தின் மனைவியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன், நடிகை ரெஜினா கசெண்ட்ரா, நடிகர் ஆரவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. அதன் பின்னர், ரீமேக் உரிமையில் ஏற்பட்ட குளறுபடியால், ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தனர். தற்போது விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இயக்குனர் மகிழ் திருமேனி பல்வேறு பேட்டிகளை அளித்து வரும் நிலையில், அதில் படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... 20 வருஷமா அஜித் - த்ரிஷா காம்போவை சோதிக்கும் பிரச்சனை! விடாமுயற்சியிலும் ஒர்கவுட் ஆகாத சோகம்!
அதில் அவர் கூறியதாவது : படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை என நான் மிகவும் அப்செட்டில் இருந்தேன். அப்போது அஜித் சார் என்னை அழைத்து, கவலைப்படாதீங்க மகிழ், பண்டிகை நாள்ல நாம வரலேன்னா என்ன, நம்ம படம் ரிலீஸ் ஆகுற அந்த நாள் பண்டிகையா மாறும். அவருடைய சில வார்த்தைகள் அப்படியே நடக்கும். நானே இதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். விடாமுயற்சி டைட்டில் பற்றி அஜித் சார் சொல்லும்போது, டைட்டிலுக்கு ஒரு பவர் இருக்கு மகிழ் என சொன்னார்.
விடாமுயற்சி டைட்டில் நம்மளை டெஸ்ட் பண்ணுகிறது. அந்த டைட்டில் என்னுடைய பெயரையும் கொண்டிருக்கிறது. அதனால் அந்த டைட்டிலுக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும் என அஜித் சார் சொன்னார். அதுமட்டுமின்றி படம் பார்த்த பின்னர் என்னையும், படக்குழுவினரையும் அழைத்து, இந்தப்படம் இந்தப்படம் நம்முடைய கெரியரில் ஒரு மறக்கமுடியாத படமாக அமையும். நான் நினைச்சதைவிட படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. இதுமாதிரி படங்களை தான் நான் தொடர்ந்து பண்ண ஆசைப்படுகிறேன் என அஜித் சொன்னதாக மகிழ் திருமேனி கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... எவன் திமிருக்கும் பவருக்கும் பணியாதே; அனல்பறக்கும் வரிகளுடன் ரிலீஸான விடாமுயற்சி பாடல்