நடிகை திரிஷா குறித்து பேசிய மகிழ் திருமேனி!

4 hours ago
ARTICLE AD BOX

இயக்குனர் மகிழ் திருமேனி, நடிகை திரிஷா குறித்து பேசி உள்ளார்.நடிகை திரிஷா குறித்து பேசிய மகிழ் திருமேனி!நடிகை திரிஷா தற்போது தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் ஐடென்டிட்டி எனும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தது இவர், விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதேசமயம் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. எனவே வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர தயாராகும் விடாமுயற்சி படத்தை கொண்டாடுவதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகை திரிஷா குறித்து பேசிய மகிழ் திருமேனி!இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து பேசி உள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “திரை உலகில் தொடர்ந்து பத்து 15 வருடங்களாக ஆட்சி செய்யும் கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அதுபோன்ற வாய்ப்புகள் குறைய தொடங்கிவிட்டன. அதுலயும் நம்பர் ஒன் என்ற இடம் மியூசிக்கல் சேர் மாதிரி மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நடிகை திரிஷா தொடர்ந்து 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு இணையான ஒரு நடிகை வேண்டுமென்று நினைத்தபோது நடிகை திரிஷா மிகவும் இயல்பான தேர்வாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article