ARTICLE AD BOX
Vairamuthu: இயக்குநரும் தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான கஸ்தூரி ராஜா, பாடலாசிரியர் யுகபாரதியின் மஹா பிடாரி நூற்று இருபது காதல் கவிதைகள் எனும் நூள் வெளியீட்டு விழா தொடர்பான விளம்பர நிகழ்ச்சியை சினிமா விகடன் நடத்தியது. இதில் கலந்து கொண்டு கஸ்தூரி ராஜா பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
நான் பாட்டெழுத காரணமானவர்
கஸ்தூரி ராஜா மேடைக்கு வந்த பிறகு, பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, தான் சினிமாவில் பாட்டெழுத வந்ததற்கு மிக முக்கிய காரணமாக கஸ்தூரி ராஜா இருக்கிறார் என்றும், அவருடையை எருக்கங் செடி ஓரம் இருக்கி புடிச்ச மாமா பாடலையும், தூதுவளை எலை அறைச்சு பாடலையும் சிலாகித்து பேசினார். தமிழ் சினிமாவின் பல வெற்றிப் பாடல்களை மண் சார்ந்த படைப்புகளாக எழுதியவர் கஸ்தூரி ராஜா. நான் எள்ளு வய பூக்கலையேன்னு பாடல் எழுத காரணமாக இருந்தததும் அவர் தான் என பெருமை படுத்தினார்.
நான் என் காலத்திலேயே தங்கிவிட்டேன்
தொடர்ந்து பேசிய கஸ்தூரி ராஜா, இவர் என்னைப் பற்றி இவ்வளவு சொல்கிறார். ஆனால், நான் இவரைப் பற்றி கேள்வி பட்டதே இல்லை. நான் என் சினிமா காலத்திலேயே தங்கி விட்டேன். அதனால இந்த காலத்து பாடலாசிரியர்கள் பத்திய ஐடியாவே எனக்கு இல்ல என்றும், இந்த நிகழ்ச்சிக்கு வந்த பின் தான் அவர் செய்த சாதனைகள் எல்லாம் தெரிகிறது என்றார்.
மேலும் படிக்க: தனுஷ் கடவுளோட குழந்தை.. என்ன சொல்கிறார் கஸ்தூரி ராஜா?
உலக தர பாட்டு
மேலும் பேசிய அவர், நான் என்னை சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். அதற்கான வேலைகளில் நான் ஈடுபட்டிருந்த போது, காதல் வரும் பருவம் படத்திற்கு பாட்டு எழுத வைரமுத்து வந்தார்.
அப்போ ட்யூனுக்கு ஏத்த மாதிரி டம்மி வார்த்தை எல்லாம் போட்டு நான் பாட்டு எழுதி தர்றேன். அதா அவரும் வாங்கிட்டு போயிட்டாரு. வார்த்தைகள் எல்லாம் உலகத் தரத்தில் இருக்கிறது ஐயா என சொல்லிவிட்டு சென்றார்.
சிதைக்க விரும்பல
பின், அடுத்தநாளே பாடலை வைரமுத்து எழுதி அனுப்பினார். பிரித்து பார்த்தால், நான் எழுதிய பாடலையே எனக்கு திருப்பி அனுப்பினார். இதுபற்றி கேட்டதற்கு, இதுவே நன்றாகத் தானே இருக்கிறது. நான் இதை கெடுக்க விரும்ப வில்லை எனக் கூறினார். அதனால், நான் பெரிய ஆளுமைகளோடு பணியாற்றுவது கடினம் என நினைத்துக் கொண்டேன் எனக் கூறினார்.
கஸ்தூரி ராஜா
கஸ்தூரி ராஜா, தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டும் இல்லாமல், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல அடையாளங்களை தன்னுள் வைத்துள்ளார். 1980களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த இவர், 1991ம் ஆண்டு ராஜ்கிரணை வைத்து இயக்கிய என் ராசாவின் மனசிலே எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
மேலும் படிக்க: நன்றி மறந்த வைரமுத்து.. தயாரிப்பாளர் தாக்கு..
தற்போது தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் படத்தை தயாரித்தும் உள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் ஹிட் அடித்ததுடன், மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று அசத்தி வருகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்