ARTICLE AD BOX
UPW vs DCW: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி த்ரில் வெற்றிபெற்றது.
வதோரா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் டெல்லி – உபி வாரியஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய உபி வாரியர்ஸ் தொடக்க வீராங்கனையான, கிரண் நவ்காரே (Kiran Navgire) நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தார். இருப்பினு, 27 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் களமிறங்கிய வ்ரிந்தா தினேஷ் 16, தீப்தி ஷர்மா 7, ஸ்வீதா செஹ்ராவத் 37, கிரேஸ் ஹாரிஸ்12, சினிலே ஹென்றி33 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, களமிறங்கிய டெல்லி வீராங்கனைகள், ஷபாலி வர்மா – மெக் லேனிங் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்படி, ஷபாலி வர்மா 26 ரன்னும், மெக் லேனிங் 69, அனபெல் சுதெர்லண்ட் 32, மரீசானே 28 ரன்னும் அடித்து அசத்தினர். இறுதியில் 2 பந்துகளில் 1 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இறுதி ஓவரில் பீல்டர்களின் பதற்றம், எதிர் அணிக்கு ரன்களை குவிக்கவும் வாய்ப்பாக அமைந்தது. இதனை தொடர்ந்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி அசத்தல் வெற்றி அடைந்தது.
5 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், தரவரிசை பட்டியலில் நடப்பு சாம்பியனான பெங்களூரு மகளிர் அணி, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த 2 மற்றும் 3வது இடங்களில் மும்பை, குஜராத் அணிகள் உள்ளன.
Readmore: தொடரும் அட்டூழியம்..! ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் நடுக்கடலில் கைது…!
The post UPW vs DCW: கடைசி பந்து வரை த்ரில்!. கதிகலங்கிய உபி வாரியர்ஸ்!. டெல்லி அபார வெற்றி!. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.