ARTICLE AD BOX
Udhayanidhi : சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 2,500 பயனாளிகளுக்கு வீட்டுமனைக்கான பட்டாக்களை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பட்டாக்களை வழங்கினார்.
பின்னர் இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “திராவிட மாடல் அரசு என்றால் என்ன என்று சிலர் கேட்கின்றனர். அவர்களுக்கு இங்கே பதில் சொல்கிறேன்."இன்னாருக்கு மட்டும் இது என்று இருந்ததை எல்லோருக்கும் எல்லாம்" என்பது தான் திராவிட மாடல். இந்த இலக்கை நோக்கியே முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
29 ஆயிரத்து 187 பேருக்கு பட்டா
அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் சிறப்பான அறிவுறுத்தி இருந்தார். பட்டா இல்லாத 63 ஆயிரம் மக்களுக்கு 6 மாதத்தில் பட்டா வழங்க வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தி இருந்தார். சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் மட்டும் 29 ஆயிரத்து 187 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது.
மதுரை, நெல்லை மாவட்டங்கள், மாவட்ட தலைநகர பகுதிகளில் மட்டும் 57 ஆயிரத்து 84 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட உள்ளது. ஏறத்தாழ 86,000 பட்டாக்களை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார்.
அனைவருக்கும் முகவரி கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம்
இது தமிழ்நாட்டின் வரலாற்றில் நிலைத்து நிற்கப் போகின்ற ஒரு நடவடிக்கை என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. தமிழ்நாட்டில் அனைவருக்கும் முகவரி கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால் முகவரி இல்லாமல் கல்வி வேலைவாய்ப்பற்ற மனிதர்களாகத்தான் இருந்திருப்போம்.
திராவிட இயக்கம் வந்த பிறகுதான் கல்வி வேலைவாய்ப்பு தமிழ்நாடு தன்னிறைவு நிலையை அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். உங்கள் பிள்ளைகளை எல்லாம் பட்டதாரி ஆக்கிய திராவிட மாடல் இயக்கம் இன்று உங்களை பட்டாதாரர் ஆக்கியுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகம் அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் 12 லட்சத்திற்கு 29 ஆயிரம் பேருக்கு பட்டாக்களை வழங்கி சாதனை படைத்திருக்கிறது. அனைவருக்கும் வீடு என்ற கலைஞரின் கனவை நனவாக்க நம்முடைய திராவிட மாடல் அரசும் முதலமைச்சரும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்” எனக் கூறினார்.
அண்ணாமலைக்கு உதயநிதி சவால்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,” பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார் அண்ணாமலை. தமிழகத்திற்கான நிதியை பெற்றுத்தர அவரால் ஏதாவது முடிந்தால் அதை செய்ய சொல்லுங்கள். போஸ்டர் ஒட்டுவதெல்லாம் ஒரு பெரிய சாதனையா? வரச் சொல்லுங்க, நான் வீட்டுகிட்ட தான் இருப்பேன். இன்று மாலை இளைஞரணி நிகழ்ச்சி இருக்கிறது. ஏற்கனவே அறிவாலயம் பக்கம் ஏதோ செய்வேன் என்று அண்ணாமலை சொன்னார். தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்க.
தனியார் பள்ளி ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று தான் நடத்தி வருகிறார்கள் சட்ட விரோதமாக அல்ல. தனியார் பள்ளியில் அளிக்கிறார்களா? சீருடை வழங்குகிறார்களா? அதையும் இதையும் ஒப்பிடாதீர்கள்.
முறையான ரயில் சேவையை ஏற்படுத்தி தரவில்லை
மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி வாரணாசியில் நடந்தது அவர்கள் பயணம் செய்ய டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் பயணம் மேற்கொள்ள பிரச்சனை இருப்பது தெரியவந்தது. முழுக்க முழுக்க காரணம் ஒன்றிய பாஜக அரசு கூட்டத்தை மேலாண்மை செய்யவில்லை.
விளையாட்டு வீரர்களுக்கு ரயில் கிடைக்கவில்லை என்று தகவல் காலையில் கிடைத்தது உடனடியாக SDAT மூலம் அவர்களுக்கு விமான டிக்கெட் ஏற்பாடு செய்து உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு வாரணாசியில் இருந்து பெங்ளூர் வருவார்கள் அங்கிருந்து விமானம் உள்ளது.
கும்பமேளாவுக்கு சென்று திரும்ப முறையாக ரயில் சேவை இல்லாமல் மக்கள் திண்டாடுவதை பார்த்தோம் முறையான ரயில் சேவையை ஏற்படுத்தி தரவில்லை.” என பேசினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்