கன்னி ராசிக்கு தொழிலில் சூப்பர் மாற்றம்.. 4 கிரகங்களால் வாழ்க்கை பிரகாசிக்கப் போகுது

3 hours ago
ARTICLE AD BOX

கன்னி ராசிக்கு தொழிலில் சூப்பர் மாற்றம்.. 4 கிரகங்களால் வாழ்க்கை பிரகாசிக்கப் போகுது

Astrology
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

சதுர் கிரக யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி நான்கு கிரகங்கள் சேர்க்கையின்போது சதுர் கிரக யோகம் ஏற்படும். அந்த வகையில் மீனம் ராசியில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின்சேர்க்கை நடைபெறவுள்ளது. இது மிகவும் அரிய நிகழ்வு. இது கன்னி ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

மீனம் ராசியில் ஏற்கனவே ராகு பகவான் இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி சுக்கிரன் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலத்தில் இருக்கிறது.

Kanni 4 planets

இதேபோல பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி புதன் பகவான் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் அங்கு நீட்சமாக உள்ளார். இது நீட்சபங்க ராஜயோகத்தை உருவாக்க உள்ளது. மார்ச் மாதம் 14 ஆம் தேதி சூரிய பகவானும் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை சதுர் கிரக யோகம் என்பார்கள்.

கன்னி ராசிக்கு ஏழாம் இடமான களஸ்தர ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் கூட்டு சேர்க்கை நடைபெறவுள்ளது. புதன் கிரகத்தை ராசி அதிபதியாக கொண்ட நீங்கள், எதிலும் நிதானமாக, தெளிவாக யோசித்து இறங்குபவர் நீங்கள். ஆனால் சமீபத்தில் உங்கள் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகள் மிகவும் கசப்பானவை.

உங்களால் உதவி பெறுவோர் அதிகமாக இருந்தாலும், உங்களுக்கு உதவி செய்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கும். தொழில், வீடு, குடும்பம் எல்லாவற்றிலும் பிரச்னைகளை சந்தித்திருப்பீர்கள். கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் பனி போல விலகும். தொழில் தடைகள் விலகும். மனைவி, தொழில், நட்பு ஸ்தானம் பலமடைய போகிறது.

புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சுக்கிர பகவானால் தொழில் சம்பந்தப்பட்ட நிதி தாராளமாக கிடைக்கும். சூரிய பகவானால் உங்களின் நிர்வாகத்திறமை முழுமையாக வெளிப்படவுள்ளது. எனவே தொழிலில் நல்ல யோகங்களை பெறப் போகிறீர்கள். நீட்ச பங்க ராஜயோகத்தால் எதிர்பாராத திடீர் யோகம், நல்ல லாபம் கிடைக்கும்.

தொழிலில் புதிய பங்குதாரர்கள் சேர்வார்கள். உத்யோகத்தில் நீங்கள் எதிர்பார்த்தபடி பல அதிரடி மாற்றங்கள் நிகழும். பதவி உயர்வு, சம்பள உயர்வு நிச்சயம் இருக்கும். பணி நிமித்தமாக வெளிநாடு, வெளிமாநிலம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதுவரை திருமண தடைகள் இருந்திருந்தால், அது நீங்கி திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

திருமணம் சம்பந்தப்பட்ட தோஷம் முழுமையாக நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய வீடு, நிலம், வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட வீடு புனரமைப்பு பணிகள் நடைபெறும்.

தேக ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உயர் கல்விக்கான முயற்சிகளும் வெற்றிகரமாக நிறைவேறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிக்கரம் கிடைக்கும். தொழிலில் அடுத்தகட்டத்துக்கு செல்ல கூடியளவுக்கு முன்னேற்றம் இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

More From
Prev
Next
English summary
Sathur Graga yogam Suriyan, Rahu, Buthan, Sukkiran to travel in Meenam rasi. this period Kanni (Virgo) will get new heights in Business .
Read Entire Article