TN Budget 2025: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி உள்ளிட்ட 11 இடங்களில் கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், நேற்று 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் 10 மாவட்டங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசிற்கான 2025 -26 பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில், உயர்கல்விச் சேர்க்கை விகிதத்தைப் பொறுத்தவரை, நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.

அந்தச் சாதனை அளவை மேலும் உயர்த்திடும் வகையில், கல்லூரி மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வியினைத் தொடர்ந்து வழங்கிட இந்த அரசு பல முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் திறன்மிகு வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், மின் பதிப்புகள் கொண்ட நூலகங்கள், மாணவர் விடுதிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் 2025-26 ஆம் ஆண்டில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி அன்னியூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தி வந்தார், கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் புகழேந்தி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்றையே பட்ஜெட் தாக்கலில் மறைந்த எம்எல்ஏ புகழேந்தி கனவை நினைவாக்கும் விதமாக விக்கரவண்டியில் அரசு கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் உத்தரவின் பேரில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

குன்னூர், நத்தம் ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், பெரம்பலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் வரும் கல்வியாண்டு மூலம் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்:

அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2000 கோடியில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கை கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்.

சமக்ரசிக்சா திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும் தமிழக மாணவர்களின் கல்வியில் ஒரு துளிகூடபாதிப்பு இருக்காது.

அண்ணா பல்லைக்கழகத்துக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும்.

அரசு பொறியியல் கல்லூரிகளில் இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் சார்ந்த புதிய பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்படும். திறன்மிகு வகுப்பறை, நூலகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பை ஏற்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.550 கோடி ஒதுக்கப்படும். உயர்க்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். பணியிடங்களில் தேர்ச்சி பெறுவதை அதிகரிக்க ஊக்குவிக்கும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்க பள்ளிப்பாடத்தில் சதுரங்கத்தை சேர்த்து உடற்கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் குன்னூர், நத்தம், சென்னை ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர் உள்ளிட்ட 10 இடங்களில் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.