ARTICLE AD BOX
சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்தபடியாக பல ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்படும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தான். தற்போது ஜீ தமிழ் தொடரில் ஏற்படும் முக்கிய மாற்றம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜீ தமிழில், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப, பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக ஜீ தமிழில் மதியவேளையில் தற்போது மனசெல்லாம், இரவு வேளையில் கெட்டிமேளம் போன்ற சீரியல்கள் சமீபத்தில் புதிதாக துவங்கப்பட்டது. இதை தொடர்ந்து, வரும் திங்கள் முதல் 'ராமன் தேடிய சீதை' என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

கன்னடத்தில் வெற்றி பெற்ற, 'சீதா ராமன்' என்ற சீரியலின் டப்பிங் சீரியலாக இது ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரை திங்கள் முதல் சனி கிழமை வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்ப உள்ளதாக சேனல் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இதுவரை 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'மனசெல்லாம்' தொடர் இனிமேல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 'நானே வருவேன்' சீரியல் இனி 3:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

பிறப்பிலேயே சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையுடன் தனியாளாக வாழ்ந்து வரும் சீதையின் வாழ்க்கையில் ராமனின் வருகை எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது? ராமனின் வருகையால் சீதையின் வாழ்க்கை வண்ண மயமாக மாறுமா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம்.

கன்னடத்தில் பலரின் பேவரட் சீரியலாக இருக்கும் இந்த தொடர், வரும் திங்கள் முதல் 'ராமன் தேடிய சீதை' என்கிற பெயரை தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.