டி20 கிரிக்கெட் தொடர்; 2வது போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

10 hours ago
ARTICLE AD BOX

டுனெடின்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கடந்த 16ம் தேதி நடைபெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

வெற்றிப்பயணத்தை தொடர நியூசிலாந்தும், கடந்த ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 6.45 மணிக்கு தொடங்குகிறது.


Read Entire Article