ARTICLE AD BOX
லண்டன்: 2025 ஆம் ஆண்டுக்கான தி ஹெண்டரட் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐந்தாவது சீசனில் ஐபிஎல் அணிகள் இந்த அணிகளின் பங்குகளை வாங்கி இருப்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் 8 அணிகளும் டிராஃப்ட்டுக்கு முன்பு எந்தெந்த வீரர்களை தேர்வு செய்து இருக்கிறோம் என்பதை அறிவித்திருக்கிறார்கள்.
அதன்படி ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்மித்,மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் ட்ரெண்ட் ராக்கெட் அணிக்காகவும், வில்லியம்சன் லண்டன் ஸ்பிரிட் அணிக்காகவும் ஹென்றிச் கிளாசன் மான்செஸ்டர் ஒரிஜினல் அணிக்காகவும் ,டேவிட் மில்லர் சூப்பர் சார்ஜஸ் அணிக்காகவும், டுப்ளசிஸ் சதர்ன் பிரேவ்மேன் அணிக்காகவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் 8 அணிகளும் எந்தெந்த வீரர்களை ஒப்பந்தம் செய்திருக்கிறது என்ற பட்டியலை தற்போது பார்க்கலாம்.

பர்மிங்காம் பீனிக்ஸ் : லியாம் லிவிங்ஸ்டோன், பென் டக்கெட், ட்ரென்ட் போல்ட், ஜேக்கப் பெத்தேல், பென்னி ஹோவெல், ஆடம் மில்னே, டான் மௌஸ்லி, டிம் சவுத்தி, வில் ஸ்மீட், கிறிஸ் வுட், அனூரின் டொனால்ட்
லண்டன் ஸ்பிரிட் : லியாம் டாசன், டேனியல் வொரால், கேன் வில்லியம்சன், ரிச்சர்ட் க்ளீசன், ஓலி ஸ்டோன், ஓலி போப், கீடன் ஜென்னிங்ஸ்
மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் : ஜோஸ் பட்லர், பில் சால்ட், ஹென்ரிச் கிளாசென், மேத்யூ ஹர்ஸ்ட், ஸ்காட் கியூரி, ஜோஷ் டங்கு, டாம் ஹார்ட்லி, சோனி பேக்கர், டாம் ஆஸ்பின்வால்
வடக்கு சூப்பர்சார்ஜர்ஸ் : ஹாரி புரூக், அடில் ரஷீத், டேவிட் மில்லர், மிட்செல் சாண்ட்னர், பிரைடன் கார்ஸ், மேத்யூ பாட்ஸ், பென் டுவார்ஷுயிஸ், கிரஹாம் கிளார்க், பாட் பிரவுன், டாம் லாவ்ஸ்
ஓவல் இன்வின்சிபிள்ஸ்: சாம் குர்ரான், வில் ஜாக்ஸ், டாம் குர்ரான், ஜோர்டான் காக்ஸ், ரஷீத் கான், சாகிப் மஹ்மூத், சாம் பில்லிங்ஸ், கஸ் அட்கின்சன், நாதன் சௌட்டர், டோனோவன் ஃபெரீரா, டவாண்டா முயேயே
சதர்ன் பிரேவ்: ஜேம்ஸ் வின்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், டைமல் மில்ஸ், கிறிஸ் ஜோர்டான், ஃபாஃப் டு பிளெசிஸ், லியூஸ் டு ப்ளூய், கிரெய்க் ஓவர்டன், லாரி எவன்ஸ், ஃபின் ஆலன், டேனி பிரிக்ஸ், ஜேம்ஸ் கோல்ஸ்
ட்ரெண்ட் ராக்கெட்ஸ் : ஜோ ரூட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டாம் பான்டன், ஜான் டர்னர், சாம் குக், சாம் ஹெய்ன், டாம் அல்சோப், கால்வின் ஹாரிசன்
வெல்ஷ் ஃபயர் : ஸ்டீவ் ஸ்மித், ஜானி பேர்ஸ்டோவ், டாம் கோஹ்லர்-கேட்மோர், டாம் அபெல், லூக் வெல்ஸ், ஸ்டீபன் எஸ்கினாசி