இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today January 23, 2025:

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷம்

மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். பதற்றமின்றி கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உதவி கிடைக்கும் நாள்.

ரிஷபம்

கலகலப்பான பேச்சுகளால் நட்பு வட்டம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். மேல்நிலைக் கல்வியில் தெளிவுகள் பிறக்கும். கால்நடைகள் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். சுபம் நிறைந்த நாள்.

மிதுனம்

உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பொழுதுபோக்கு விசயங்களில் கவனம் வேண்டும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

கடகம்

நினைத்த சில காரியங்களில் அலைச்சல் ஏற்படும். தாயாருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபம் அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். பணி நிமித்தமான இழுபறியான சில வேலைகள் முடியும். தேர்ச்சி நிறைந்த நாள்.

சிம்மம்

இசை சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் மறையும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். தொழில் சார்ந்த முயற்சிகளில் விவேகம் வேண்டும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.

கன்னி

விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வதால் நன்மைகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நன்மை நிறைந்த நாள்.

துலாம்

நினைத்த சில பணிகளால் அலைச்சல் உண்டாகும். பழைய கடன் சார்ந்த முயற்சிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வாகனங்களில் நிதானம் வேண்டும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.

விருச்சிகம்

நண்பர்கள் வழியில் விரயங்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் மேம்படும். புதிய நபர்களின் கருத்துக்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிந்தனை மேம்படும் நாள்.

தனுசு

உத்தியோகம் நிமித்தமான பணிகளில் பொறுப்புகள் குறையும். சொத்துக்கள் மூலம் மேன்மை ஏற்படும். உயர்கல்வியில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொது காரியங்களில் ஒத்துழைப்பு ஏற்படும். பயணம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். அமைதி நிறைந்த நாள்.

மகரம்

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வழக்கு தொடர்பான நுணுக்கங்களை அறிவீர்கள். வேளாண்மை தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவங்கள் உருவாகும். உறவினர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர் மட்ட அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பாசம் மேம்படும் நாள்.

கும்பம்

பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தள்ளிப்போன சுப காரியம் கைகூடி வரும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சமூக நிகழ்வுகளால் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். விருத்தி நிறைந்த நாள்.

மீனம்

துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். பழைய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல்கள் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். சிந்தித்து செயல்படுவது நல்லது.