ARTICLE AD BOX
மனிதர்களின் முகத்தில் இன்றியமையாத உறுப்பாக இருக்கும் மூக்கு, தனிநபரின் அழகுக்கு முக்கிய விஷயமாகவும் வெளித்தோற்றத்தில் கவனிக்கப்படுகிறது. சிலருக்கு மூக்கை சுற்றிலும் சொரசொரவென, வெள்ளைப்புள்ளிகளுடன் இருக்கும். இதனை ஒயிட் ஹெட் என அழைப்பார்கள். இன்னும் சிலருக்கு இது கருமை நிறத்துடன் இருக்கும். இதனை பிளாக் ஹெட் என கூறுவார்கள்.
ஒயிட் ஹெட் மற்றும் பிளாக் ஹெட் சருமத்தின் மென்னைத்தன்மையை இழக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், அது பாதிக்கப்பட்ட இடமும் தனியாக இருக்கும். இதனை சரியாக்க காட்டன் துணியை கொண்டு சிலர் தேய்ப்பர். ஆனால், இவ்வாறு செய்தால் எந்த பலனும் இருக்காது.
இதையும் படிங்க: 40 வயதிலும், 20 வயது இளமை தோற்றம்.. இந்த 3 விஷயங்களை செஞ்சா போதும்.!
சரும வறட்சி காரணமாக மூக்கினை சுற்றியுள்ள பகுதி சரும துளைகளை சுத்தம் செய்யாமல் இருப்பதால் இவ்வாறான பிரச்சனை ஏற்படுகிறது. இன்று அதனை சரிவு செய்யும் சில முறைகள் குறித்து காணலாம்.
வால்நட் பொடி:
கையளவு வால்நட் பொடிசெய்து, தேன் கலந்து முகத்தில் தேய்த்து உலரவைக்கலாம். பின் மென்மையான துணியால் மசாஜ் செய்தால், மூக்கில் இருக்கும் கருமையான புள்ளிகள் சரியாகும்.
ஸ்டிராபெர்ரி பழத்தினை இரண்டாக பிளந்து, நேரடியாக முகத்தில் மசாஜ் செய்தால் மூக்கு பகுதியில் இருக்கும் கரும்புள்ளிகள் சரியாகும். பச்சை நிற பயிறு அரைத்து, மாவு செய்தும் முகத்தில் தேய்த்து பலன் பெறலாம்.
வேர்கடலை:
வேர்கடலையை அரைத்து பால் சேர்த்து மூக்கில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் நீங்கும். ஓட்ஸ் பொடியுடன் பட்டை தூள், நீர் சேர்த்து முகத்தில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து இளம் சூடுள்ள நீரில் முகம் கழுவினாலும் நல்ல பலன் உண்டாகும்.
பேக்கிங் சோடா, எலுமிச்சை போன்றவை ஒருசிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் அதனை உபயோகம் செய்ய நினைப்போர், மருத்துவரின் ஆலோசனை பெறலாம்.
இதையும் படிங்க: தலை முடி ஆரோக்கியத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? அசத்தல் டிப்ஸ் இதோ.!