நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நேரமே நமது முதலீடாகும் : முதலீட்டால் நாம் முதலாளி ஆகுவோம்…!!

6 hours ago
ARTICLE AD BOX

இந்த உலகத்திலேயே எது மிகவும் விலைமதிப்பற்றது என்று வெற்றி பெற்ற சாதனையாளர்களிடம் சென்று கேட்டால் நேரத்தையே குறிப்பிடுவார்கள். நேரம் என்பது நம் வாழ்க்கை முன்னேறுவதற்கான முதலீடாகும், அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டியது நமது கடமை. இதை தெளிவாக புரிந்து கொள்ள இந்த பதிவை படிப்போம்…

ஒரு ஊரில் ஒரு அப்பா மகன் வாழ்ந்து வந்தார்கள். அப்பா மிகப்பெரிய தொழிலதிபர் அவருக்கு நேரம் என்பது முதலீடாகும். ஆனால் அவருடைய மகன் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு நேரத்தின் மதிப்பை எப்படியாவது புரிய வைக்க வேண்டும் என்று அவர் அப்பா எண்ணினார். ஒரு நாள் மகனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த பூங்காவிற்கு சென்றார் அங்கே நிறைய பிச்சைக்காரர்கள் இருப்பது வழக்கம். அங்கே சென்று அப்பா அங்கிருந்த 3 குறிப்பிட்ட பிச்சைக்காரர்களுக்கு மட்டும் ஒரு கட்டு பணத்தை கொடுத்தார். இதைப் பார்த்த மகன் நான் கேட்டால் ஒரு பைசா கூட தரமாட்டான் ஆனால் இவர்களுக்கு இவ்வளவு பணம் தருகிறார் என்று நினைத்துக் கொண்டான். இப்படியே நாட்கள் நகர்ந்தது ஒரு வருடமானது இப்போது அப்பா மறுபடியும் மகனை அழைத்துக்கொண்டு அதே பூங்காவிற்கு சென்று பார்க்கிறார். அன்று பார்த்த மூன்று பிச்சைக்காரர்கள் ஒருவர் மட்டுமே அமர்ந்திருந்தார் அந்த பிச்சைக்காரனிடம் சென்ற தந்தை நான் போன வருடம் உங்களுக்கு பணம் கொடுத்தேன் நினைவிருக்கிறதா அந்த பணத்தை எல்லாம் என்ன செய்தீர்கள் மறுபடியும் இங்கேயே வந்து உட்கார்ந்திருக்கிறீர்களே என்று கேட்டார். அதற்கு அந்த பிச்சைக்காரன் நான் அந்த பணத்தை வைத்து இரண்டு மாதம் நன்றாக சாப்பிட்டேன் பிறகு பணம் தீர்ந்ததும் மறுபடியும் இங்கேயே வந்து விட்டேன் என்று கூறினார். உன்னுடன் இன்னும் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தார்களே அவர்கள் எங்கே என்று கேட்டார் அப்போது பிச்சைக்காரன் எதிரே இருக்கும் ஐஸ்கிரீம் கடையை காட்டி அந்த கடை நீங்கள் பணம் கொடுத்த ஒரு பிச்சைக்காரனுடையது என்று கூறினார் இன்னொரு பிச்சைக்காரன் நீங்கள் கொடுத்த பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஏமாந்து விட்டான் என்று சொல்லி முடித்தார்.இப்போது அந்த அப்பா தன் மகனிடம் கூறினார் நான் இந்த மூன்று பேருக்கு ஒரே நாள் ஒரே அளவிலான பணத்தை கொடுத்தேன். அதில் ஒருவன் பணத்தை வீணடித்து போன வருடம் எந்த நிலையில் இருந்து பார்த்தோமோ அதே நிலையில் தான் இருக்கிறான். இன்னொருவன் அதே பணத்தால் சூதாட்டத்திற்கு அடிமையாகி தான் ஏற்கனவே இருந்த நிலையில் இருந்து மோசமாக இருக்கிறான். ஒரே ஒருவன் மட்டுமே அந்த பணத்தின் மிக சரியாக பயன்படுத்தி அனைவரும் பாராட்டும் மனதிற்கு உயர்ந்திருக்கிறான் அதற்கு காரணம் நான் கொடுத்த பணத்தை அவன் முதலீடாக பார்த்தான். இந்த பணத்தை விடவும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் மதிப்பு வாய்ந்தது. நாம் நினைத்தால் நம் நேரத்தை வீணாக்கவும் முடியும் அல்லது அதையே முதலீடாக மாற்றி எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்று கூறினார் அப்பா. இந்த கதையை சொன்னது போல தன்னுடைய நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துகிறவனே வெற்றி பெறுகிறான், இதைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் முயற்சித்து பாருங்கள்..!!

Read Entire Article