ARTICLE AD BOX
பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது தொடரப்பட்ட செக் மோசடி வழக்கு, கடந்த 7 ஆண்டுகளாக அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில், ராம் கோபால் வர்மாவுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியில் வெளியான 'சத்யா', 'ரங்கீலா' படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. கடந்த 1989-ம் ஆண்டு வெளியான ஷிவா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அதனைத் தொடர்ந்து இந்தி தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக கடந்த 2024-ம் ஆண்டு வியூகம் என்ற தெலுங்கு படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் அஜ்மல் நாயகனாக நடித்திருந்தார்.
மேலும், பிரபல ஆபாச பட நடிகை மியா மல்கோவா நடிப்பில், காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் என்ற ஆபாச படத்தை இயக்கி சர்ச்சையை ஏற்படுத்திய ராம்கோபால் வர்மா மீது, கடந்த 2018-ம் ஆண்டு, மகேஷ்சந்திர மிஸ்ரா என்பவரின் ஸ்ரீ என்ற நிறுவனம் ராம்கோபால் வர்மாவின் நிறுவனத்திற்கு எதிராக செக் மோசடி வழக்கு தொடங்கப்பட்டது. இந்த வழக்கில் ரூ5000 பணம் செலுத்தி, ஜாமீன் பெற்றார் ராம்கோபால் வர்மா.
அதே சமயம் இந்த வழக்கில், தண்டனை விதிக்கும் போது, இயக்குனர் ராம் கோபால் வர்மா குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 428 இன் கீழ் எந்தவொரு செட் ஆஃப்க்கும் தகுதியற்றவர் என்று நீதிபதி ஒய்.பி. பூஜாரி தெளிவாக கூறியிருந்தார். வழக்கின் விசாரணையின் போது எந்த நேரமும் ராம்கோபால் வர்மா காவலில் இல்லாத நிலையில்,விசாரணையின் போது ஆஜராகாததால், நீதிமன்றம் அவரை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (NBW) பிறப்பித்தது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ராம்கோபால் வர்மா, "என்னையும் அந்தேரி நீதிமன்றத்தையும் பற்றிய செய்திகளைப் பொறுத்தவரை, இது ஒரு முன்னாள் ஊழியர் தொடர்பான 7 வருட பழமையான ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் தொகைக்கான வழக்கு தொடர்பானது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது அற்பமான தொகையைத் தீர்ப்பது பற்றியது அல்ல, ஆனால் சித்தரிக்கப்பட்ட முயற்சிகளில் சுரண்டப்படுவதை மறுக்கும் செயல். எப்படியிருந்தாலும், நீதிமன்றத்தில் இருப்பதால் இப்போதைக்கு நான் சொல்லக்கூடியது அவ்வளவுதான்," என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு வர்மாவின் நிறுவனத்தால் வழங்கப்பட்ட செக்கை, பணமாக்க முடியாது, இது பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் பிரிவு 138 இன் கீழ் ஒரு குற்றமாகும். இந்தப் பிரிவு, போதுமான நிதி இல்லாததால் அல்லது நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறிய தொகை காரணமாக காசோலை அவமதிப்புக்கு தண்டனை விதிக்கிறது. இதனால் அவருக்கு மூன்று மாத சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், அந்த மாதங்களுக்குள் ரூ.3.72 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் இல்லை என்றால், கூடுதலாக மூன்று மாதங்கள் எளிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.