ARTICLE AD BOX
கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேவிஎன் ப்ரொடெக்சன் நிறுவனம், நடிகர் விஜயின் 69 வது திரைப்படத்தை தயாரித்து வழங்குவதாக அறிவித்தது.
இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் கைகோர்த்து வெளியான தி கோட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
இதையும் படிங்க: வாரிசு, புஷ்பா 2 திரைப்பட தயாரிப்பாளர் வீடு & அலுவலகங்களில் வருமான வரிச்சோதனை.!
அதனைத்தொடர்ந்து, தளபதி 69 படத்துக்காக விஜயின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கு பின்னர், விஜய் முழுநேர அரசியலில் களமிறங்குகிறார்.
#Thalapathy69 - Title and First Look on Republic Day..🔥 Touted as #ThalapathyVijay's Farewell Film..✌️ Hoping for a Good one from #HVinoth ..🤝💥 pic.twitter.com/wZl7rq37av
— Laxmi Kanth (@iammoviebuff007) January 23, 2025இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் தளபதி 69 படத்தின் தலைப்பு குடியரசு தினம் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.300 கோடி செலவில் எடுக்கப்படும் தளபதி 69 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படம் அக். அல்லது நவம்பர் 2025 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் தலைப்பு தொடர்பான அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் வின்னர் பட்டியலில் அமரன்.. எப்படி தெரியுமா? விபரம் உள்ளே.!